உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மிகப்பெரிய போர்க்கப்பலில் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா

மிகப்பெரிய போர்க்கப்பலில் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா

பியோங்யாங்: மிகப்பெரிய போர்க்கப்பலை உருவாக்கி அதிலிருந்து முதல் முறையாக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது செயற்கை கோள் படங்கள் வாயிலாக தெரியவந்துளளது. வட கொரியா அதிபராக கிம்ஜோங் உன் உள்ளார். இவர் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார் ,.இந்நிலையில் சமீபத்தில் வட கொரியாவின் கடற்படை பலத்தை வலுப்படுத்திட நாட்டின் மேற்கு கடற்கரையில் ஒரு கப்பல் கட்டும் தளத்தில் ஒரு பெரிய கப்பல் உருவாகி வருவது செயற்கை கோள் புகைபடங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. தலைநகர் பியோங்யாங்கின் தென்மேற்கே 60 கி.மீ/ தொலைவில் நம்போ கப்பல் கட்டும் தளத்தில் அந்த பெரிய போர்க்கப்பல் தண்ணீரில் மிதப்பது தெளிவாகத் தெரிகிறது. நேற்று இக்கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசி வெற்றி கரமாக சோதனை நடத்தியது. அப்போது அதிபர் கிம்ஜோங் உன் பார்வையிட்டார்.இந்த போர்க்கப்பல் தற்போதைய கடற்படையில் உள்ள எந்தவொரு கப்பலின் அளவையும் விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கலாம் என்றும், கருதப்படுகிறது. இந்த போர்க்கப்பலின் நீளம் சுமார் 140 மீட்டர் (459 அடி) இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
மே 01, 2025 07:14

அவசரத்தில் உதவி செய்த சீனா மீது அணுக்குண்டு வீசாமல் இருக்க வேண்டும். ரஷ்ய உக்ரேன் போரில் லாபம் அனைத்தும் வடகொரியாவுக்கு செல்கிறது.


முக்கிய வீடியோ