உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வடக்கு மாகாணத்திற்கு உதவி: ராஜபக்ஷே உறுதி

வடக்கு மாகாணத்திற்கு உதவி: ராஜபக்ஷே உறுதி

யாழ்ப்பாணம் : ''கடந்த 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள, வடக்கு மாகாண மக்களுக்குத் தேவையான அனைத்து வளர்ச்சிப் பணிகளும் செய்து தரப்படும்,'' என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே கூறினார்.

வடக்கு மாகாணத்தில் வரும், 23ம் தேதி நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்த, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, யாழ்ப்பாணம் மாவட்டப் பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள கோப்பாய் நாவலர் தமிழ் மகா வித்யாலயா பள்ளியில், நேற்று நடந்த கட்டடத் திறப்பு விழாவில் ராஜபக்ஷே கலந்துகொண்டு பேசுகையில், ''கடந்த 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு தேவைப்படும் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் செய்து தரப்படும்.

''இலங்கையின் அதிபர் என்ற முறையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் சேவைசெய்ய காத்திருக்கிறேன். தற்போதைய சூழலில், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், முழு அளவிலான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதே, அரசின் பிரதான நோக்கமாக உள்ளது. அதற்கேற்ப, பிரிவினை என்ற பேச்சுக்கே இடம் அளிக்காமல், நாட்டின் முன்னேற்றப் பணிகளில் வடக்கு மாகாண மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்,'' என்றார்.

பள்ளி முதல்வர் வாகீசன் பேசுகையில், ''அதிபர் ராஜபக்ஷே சுற்றுப் பயணம், வடக்குப் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார். நிகழ்ச்சியில், இலங்கை பிரதமர் ஜெயரட்னே, சிறுதொழில் வர்த்தக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உவா மாகாண முதல்வர் சஷேந்திரா ராஜபக்ஷே உட்பட, பல்வேறு அரசு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதன்பின், சாவக்கச்சேரி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்திலும் ராஜபக்ஷே பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை