உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கே.எப்.சி., சிக்கன் கடைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்; ஒருவர் கொலை

கே.எப்.சி., சிக்கன் கடைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்; ஒருவர் கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கே.எப்.சி., சிக்கன் கடைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதனால் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச பிராண்டுகள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தது தான் என்று தகவல் பரவியது. இதனால் சர்வதேச பிராண்டுகளான கேஎப்சி, பிட்சா ஹட், பூமா, டொமினோஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் கே.எப்.சி., நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடக்கிறது.பாகிஸ்தானில் கே.எப்.சி., சிக்கன் கடைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கராச்சியில், இரண்டு கடைகள் தீக்கிரையாக்கப் பட்டன. ஆயுதம் ஏந்திய கும்பல்கள் கே.எப்.சி., சிக்கன் கடைகளுக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என பாகிஸ்தான் உள்துறை இணையமைச்சர் தலால் சவுத்ரி தெரிவித்தார். இது குறித்து போலீஸ் அதிகாரி இஸ்மாயில் கூறியதாவது: முக்கிய குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை வலைவீசி தேடி வருகிறோம். இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போராட்டத்தின் போது ஒரு நபர் மார்பில் தோட்டா பாய்ந்து உயிரிழந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Srinivasan Krishnamoorthy
ஏப் 19, 2025 20:30

franchise are owned by local pakistani.dont know what you will achieve by attacking kfc franchise with the capital of pakistan men. the same thing happened. attackers don't have brain. america is least impacted by these attacks. someone should the hooligans


MUTHU
ஏப் 19, 2025 11:50

KFC கடை இருந்தால் royal மக்கள் எல்லாம் அதற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அருகில் இருக்கும் மற்ற சிக்கன் கடைகள் டல்லடித்து விடும். இதுவும் காரணம்.


Kumar Kumzi
ஏப் 19, 2025 11:48

அட மூர்க்க காட்டுமிராண்டி பேஸ் புக் இஸ்ரேல்காரர்களுடையது அதை ஏன் யூஸ் பண்ணுறீங்க


வாய்மையே வெல்லும்
ஏப் 19, 2025 11:18

அடிலைடு ஆட்கள் எங்கு நிம்மதியாக இருக்கவிடமாட்டார். எங்கும் எதிலும் பொய்யுருட்டு. வெங்காயமாடல் தீய மூர்க்க அரசு சொல்லி கொடுத்தமாதிரி எல்லாரையுமே வெறுப்பு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் உங்க அரசியல் வாழ்க்கையா ? கொஞ்சமாவது திருந்த பாருங்கப்பா அடிலெய்டு பெயரையாவது காப்பாத்துங்க. உங்க அடாவடி உலகெங்கும் பிரசித்தம் .. இப்ப பச்சை பாகிஸ்தானிலும் உங்க ஆட்டம் .. ஹா ஹ ஹா ..


Pollachi tamilan
ஏப் 19, 2025 11:05

Pakistani க்கு கடவுள் ஆறாவது அறிவ குடுக்க மறந்திடாரோ.சில சமயங்களில் இந்தியா ஏன் பிரிந்தது என்று என்னத்தோணும். ஆனால் அது எவ்வளவு நல்லது என்று இது போன்ற செய்திகளை பார்க்கும் போது தெரிகிறது.இதில் பங்களாதேஷ்ம் விதிவிலக்கல்ல.


GSR
ஏப் 19, 2025 14:38

அந்த வகையறாவே அப்படி தான். இடம் மாறினால் மட்டும் புத்தி மாறி விடுமா?


muralidaran ms
ஏப் 19, 2025 10:54

யாதும் ஊரே யாவரும் கேளிர் எல்லாருக்கும் எப்ப புரிய போவுதோ


Barakat Ali
ஏப் 19, 2025 10:38

அமெரிக்க நிறுவனங்களை எதிர்க்கும்படி சீனா தூண்டியிருக்கலாம் .... பணமும் கொடுத்திருக்கலாம் ..... அமெரிக்கா நமக்கு செய்ததை [விவசாயிகள் போராட்டம், காங்கிரசின் தேசவிரோத நடவடிக்கைகளுக்குச் சீனா பணம் கொடுத்தது அனைத்தும்தான்] சீனா அமெரிக்காவுக்குச் செய்கிறது ...... மகிழ்வோம் .....


Barakat Ali
ஏப் 19, 2025 13:11

அமெரிக்கா பணம் கொடுத்தது ...... இதுதான் சரி ....


ديفيد رافائيل
ஏப் 19, 2025 10:28

KFC வெளிநாட்டு company ஆக இருந்தா கூட அதை franchise எடுத்து நடத்துறது Pakistan நாட்டுக்காரன் தான் Pakistan Royal Group of Companies Ltd


Kasimani Baskaran
ஏப் 19, 2025 10:19

வேலை வெட்டி இல்லை என்றால் இது போலத்தான் குத்தகைக்கு வேலை செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை