உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா காட்டிய கருணையால் உயிர் தப்பிய ஒரு லட்சம் பாகிஸ்தானியர்

இந்தியா காட்டிய கருணையால் உயிர் தப்பிய ஒரு லட்சம் பாகிஸ்தானியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக, மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த வெள்ள அபாய எச்சரிக்கையால், பாகிஸ்தானில் 1 லட்சம் பேர் ஆபத்தில் இருந்து தப்பினர்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பின், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் படைகள், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தன. மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது; பாகிஸ்தானுடன் இருந்த தொடர்பை முற்றிலுமாக நிறுத்தியது.இந்நிலையில், பாகிஸ்தானில் ஜூன் முதல் பருவ மழை பெய்து வருகிறது. வெள்ளத்திற்கு இதுவரை 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 7,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொடர்பாக, பாகிஸ்தானுக்கு சமீபத்தில் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ராவி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆறுகளில் பெரும்பாலானவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் வழியாக கடலில் சேர்கிறது.எனவே, மனிதாபிமான நடவடிக்கையாக மத்திய அரசு, பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரகம் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூர், கசூர் ஆகிய பகுதிகளிலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். மூழ்கிய கர்தார்பூர் குருத்வாராபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நரோவால் மாவட்டத்தில் உள்ள கர்தார்பூர் குருத்வாரா தர்பார் சாஹிப், சீக்கியர்களின் முக்கிய குருத்வாராக்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் 80,000க்கும் மேற்பட்ட இந்திய சீக்கியர்கள் வழிபாடு நடத்த செல்கின்றனர். இந்த குருத்வாரா, ராவி ஆற்றின் வெள்ள நீரில் மூழ்கியது. அங்கு, 100-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் இந்தியர்கள் உள்ளனரா என்ற தகவல் இல்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

V.Mohan
ஆக 28, 2025 13:06

இந்த விடியல் சம்பள விசுவாச அடிவருடிகள் எந்த செய்தியிலும் கருத்து சொல்லும் போர்வையில் விஷத்தை மட்டுமே கக்குகின்றனர். அமைதி மார்க்க மக்களில் ஒரு 20 முதல் 30 சதவீதம் மக்கள் மட்டுமே மூளை சலவை செய்யப்பட்டு நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர். மற்றவர்கள் அனைவரும் நம்மைப்போல நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் தான்.


நிக்கோல்தாம்சன்
ஆக 28, 2025 11:26

இந்திய என்றொரு நாடுண்டு , அதில் மற்றைய மனிதரை மதிக்கும் மதமுண்டு , அந்த மதத்தின் மக்களும் இயற்கையை போற்றுவதுண்டு


arunachalam
ஆக 28, 2025 10:42

பாம்புக்கு பால் வார்த்தாலும் அதன் குணம் மாறாது.


Tamilan
ஆக 28, 2025 08:43

பாகிஸ்தானுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று கொக்கரித்த மோடி அரசு இப்போது திறந்துவிடாமல் இருக்கமுடியவில்லை .


Anand
ஆக 28, 2025 10:42

இந்தியா முன்னெச்சரிக்கை ஏதும் தராமல் தண்ணீரை அப்படியே திறந்து விட்டிருந்தால் பாகிஸ்தான் மக்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பார்கள்.. நன்றி என்பது தமிழன் போர்வையில் உள்ள மூர்க்க கழிசடைக்கு கிடையவே கிடையாது. நீயெல்லாம்.


Anand
ஆக 28, 2025 10:46

தண்ணீரை சொல்லாமல் கொள்ளாமல் திறந்து விடாமல் மனிதாபிமான அடிப்படியில் எச்சரிக்கை விடுத்து பாகிஸ்தானில் உயிர் சேதத்தை தவிர்த்துள்ளது, தமிழன் போர்வையில் உள்ள நன்றி கெட்ட, கேடுகெட்ட பயலுக்கு மூளை முட்டியில் உள்ளது..


sankar
ஆக 28, 2025 11:29

எப்ப அறிவோடு பேச பழகப்போற தம்பி


Arjun
ஆக 28, 2025 12:40

நீ உலகமகா அறிவாளி என்று தெரிகிறது இந்திய அரசு எச்சரிக்கை செய்யவில்லை என்றால் 1 லட்சம் பாகி்ஸ்தான் குடிமக்கள் குடி முழிகி போயிருக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 28, 2025 08:09

எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் மூர்க்கனுக்கு நன்றி என்பதே இருக்காது ...... அந்த இதற்கு விதிவிலக்கு என்பதே இல்லை ......


S.V.Srinivasan
ஆக 28, 2025 07:56

இந்த நன்றி உணர்ச்சியை எப்பவும் காட்டுங்கப்பா. உங்க அரசாங்கத்திடமும் சொல்லி வையுங்க.


T.Senthilsigamani
ஆக 28, 2025 07:37

நல்ல செய்தி . போன வாரம் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல் அறியா நடிகர் மிஸ்டர் மோடிஜி முஸ்லிம்களுக்கு நல்லது செய்ய மாட்டீர்களா என பிதற்றியுள்ளார் .அவர் கட்சியினர் இந்த செய்தியை படிக்கட்டும்


சாமானியன்
ஆக 28, 2025 06:40

பாகிஸ்தானியர்கள் புரிந்து கொண்டால் அவர்கட்கு நல்லது. கலாசாரம் ஒன்றுதான். மத அடிப்படையில் அரசாங்கம் அமைந்தால் அவ்வப்போது வரும் உரசல்கள் அந்த நாட்டிற்கு நல்லதல்ல.


Barakat Ali
ஆக 28, 2025 08:29

அதிகமா தூர்தர்ஷன் விழிப்புணர்வு நாடகங்கள் பார்ப்பீங்க போல... திமுகவால் தமிழக மக்கள் முட்டாளாக்கப்பட்டு அடிமைகளாக ஆக்கப்பட்டு விட்டனர். அதே நிலைதான் இன்று பாகிஸ்தானில் .... மாற்றம் வர வாய்ப்பே இல்லை .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை