உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் 37 ஹிந்து கோவில்கள், குருத்வாராக்கள் மட்டுமே செயல்படுகின்றன: வெளியான அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானில் 37 ஹிந்து கோவில்கள், குருத்வாராக்கள் மட்டுமே செயல்படுகின்றன: வெளியான அதிர்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மொத்தமுள்ள 1817 ஹிந்து கோயில்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டு தலங்களில் 37 மட்டுமே செயல்பட்டு வருகிறது என அந்நாட்டு பார்லிமென்ட் குழு முன்பு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பாகிஸ்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த குழு தலைவர் டானேஷ்குமார் கூறியதாவது: சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு அரசியலமைப்பு அளித்த வாக்குறுதியை பார்லிமென்ட் குழுவானது நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பின் உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பாகிஸ்தானிய சிறுபான்மையினர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு நீதி மற்றும் சமத்தும் கிடைப்பதற்கான கொள்கை சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் எனக்கூறினார்.ரமேஷ்குமார் வன்க்வானி என்ற எம்பி கூறியதாவது: சொத்து மீட்பு குழுவானது, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் குருத்வாராக்களை கவனிப்பதை கைவிட்டுவிட்டது. இந்த குழுவின் தலைமைப்பதவியை முஸ்லிம் அல்லாத நபரிடம் வழங்க வேண்டும். அப்போது தான் புறக்கணிக்கப்பட்ட மத சொத்துகளை மறுசீரமைத்து முறையாக பராமரிக்க முடியும். பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இடங்களானது, மதரீதியிலான முக்கியத்துவத்தை மட்டும் அல்லாமல், பாகிஸ்தானின் கடந்த கால கலாசார பெருமைகளை பறைசாற்றும் என்றார்.கேசோ மால் கேல் தாஸ் என்ற எம்பி கூறுகையில், நாடு பிரிவினைக்கு பிறகு பெரும்பாலான கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் கைவிடப்பட்டன. உள்ளூரில் வசித்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர் என்றார்.பார்லிமென்ட் குழு முன்பு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். வெறுப்பை தூண்டும் தகவல்கள் நீக்கப்படுவதுடன், சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். அவர்களுக்கான வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ