உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எதிர்க்கட்சிகளின் தீர்மானம்: மாலத்தீவு அதிபருக்கு சிக்கல்

எதிர்க்கட்சிகளின் தீர்மானம்: மாலத்தீவு அதிபருக்கு சிக்கல்

மாலே: மாலத்தீவு அதிபர் முகமது முய்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ள எதிர்க்கட்சி, அதற்கான கையெழுத்து பிரசாரத்தை துவக்கியுள்ளது. நம் அண்டை நாடான மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில் மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.சீன ஆதரவாளரான இவர், நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். அதிபராக பதவியேற்றது முதல், மாலத்தீவில் இருந்து நம் நாட்டின் படைகளை திரும்பப் பெறும்படி வலியுறுத்தி வருகிறார். எனினும், மாலத்தீவின் முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி, நம் நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த சூழலில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் பதவியை பறிக்க திட்டமிட்டுள்ள எதிர்க்கட்சிகள், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளன. சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் முய்சு, அந்நாட்டு உளவு கப்பலை மாலேவில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கியதை அடுத்து, அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பார்லிமென்டில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி, இதற்காக உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டையை துவங்கியுள்ளது. போதுமான உறுப்பினர்களின் கையெழுத்து கிடைத்தால், விரைவில் இந்த தீர்மானம் அந்நாட்டு பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ