உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எங்கள் போர் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் மட்டுமே: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

எங்கள் போர் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் மட்டுமே: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ''எங்கள் போர் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் தான் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் போர் துவங்கியது. காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், காசாவின் முக்கிய மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். பத்திரிகையாளர்கள், மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் தெரிவித்தார்.இது குறித்து, பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காசாவில் உள்ள மருத்துவமனையில் இன்று நடந்த துயர சம்பவத்திற்கு இஸ்ரேல் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது.பத்திரிகையாளர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களின் பணியையும் இஸ்ரேல் மதிக்கிறது. ராணுவ அதிகாரிகள் முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.எங்கள் போர் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் தான். எங்கள் இலக்குகள் ஹமாஸை தோற்கடித்து எங்கள் பிணைக் கைதிகளை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

VRM
ஆக 27, 2025 06:40

ஒவ்வொரு மூர்க்க கும்பல்களையும் துடைத்தொழிக்க வேண்டும். அப்போதுதான் உலகத்தில் மக்கள் நிம்மதியாக வாழமுடியும். மாவீரன் நேதான்யாகு நீண்ட நாள் வாழவேண்டும்.


இந்தியன்
ஆக 26, 2025 14:39

பிணைக்கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்து விட்டால் அப்பாவி காசா மக்கள் அநியாயமாக சாக் மாட்டார்களே... ஹமாஸ்க்கு ஏன் இந்த பிடிவாதம்... சொந்த நாட்டில் அப்பாவி மக்களை இப்படி சாகடிக்கிறார்களே...


தமிழ்வேள்
ஆக 26, 2025 15:33

அவர்கள் உயிருடன் இருந்தால்தானே ஒப்படைக்க இயலும் ? ஹமாஸ் மத...வெறி கும்பல் அவர்களை தீர்த்து கட்டிவிட்டதால் , இப்போது வேறு வழியின்றி , கொத்து கொத்தாக ஜஹன்னத்துக்கு படையெடுக்கிறார்கள் ....கடைசி ஹமாஸ் ஜிஹாதிக்கு கூட சாவதை தவிர வேறு வழியே இல்லை ....


Mypron
ஆக 26, 2025 12:57

வாழ்த்துக்கள் இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாத பிணம் தின்னிகள் ஒழிந்தால் மட்டுமே பாலீதீன் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்


Keshavan.J
ஆக 26, 2025 12:41

தப்பு பன்ற தலே தப்பு பன்ற, ஹமாஸ் மட்டும் அல்ல உங்களை தாக்க போறது. ஹேசப்புள்ள, ஹௌதி, ஐசிஸ் , தலிபான் மற்றும் 98 மூர்க்க கும்பல் இருக்கிறது உங்களை அழிக்க


நடுநிலைகுமார்
ஆக 26, 2025 11:43

60000 அப்பாவிகளை கொன்னுட்டு இப்பிடி பேசுறியே. போரும் ஓயாது. இஸ்ரேலுக்கும் நிம்மதி இருக்காது. நீ செய்ய வேண்டியதெல்லாம் பாலஸ்தீனத்தை அவிங்களுக்கு குடுப்பதுதான். கியூபாவை, வியட்நாமை ரஷ்யா கை உட்டமாதிரி, அமெரிக்கா இஸ்ரேலை கைவிட்டால் உயிரிடு இருப்பீங்களா என்பது சந்தேகமே.


Venugopal Gopalsamy
ஆக 26, 2025 13:04

வழக்கமான pathil.thirunthungadaa.


அன்பு
ஆக 26, 2025 21:55

60000 பொதுமக்களை இறக்க வைக்க போர் ஆரம்பித்து வைத்தது ஹமாஸ் இயக்கம்.


தஞ்சை மன்னர்
ஆக 26, 2025 10:50

நீ வேண்டுமென்ற தான்செய்து இருப்பாய் அதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை


Nada raja
ஆக 26, 2025 10:27

இது எல்லாம் உலக மகா நடிப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை