உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காஷ்மீர் குறித்து இந்தியாவுடன் பேச தயார் பாகிஸ்தான் அமைச்சர் குசும்பு

காஷ்மீர் குறித்து இந்தியாவுடன் பேச தயார் பாகிஸ்தான் அமைச்சர் குசும்பு

இஸ்லாமாபாத்:காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளதாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானுடனான உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் நேற்று கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவது மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் குறித்து மட்டுமே எங்களுடன் பேச்சு நடத்தப்படும் என இந்தியா தெரிவித்து உள்ளது. காஷ் மீர் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சு நடத்த நா ங்கள் தயாராக உள்ளோம். பாகிஸ்தான் எந்த மத்தியஸ்தத்தையும் கோரவில்லை. நடு நிலையான இடத்தில் சந்திப் புக்கு ஏற்பாடு செய்தால் ஒத்துழைப் போம். இந்தியா வுடன் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்காவிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. இந்தியாவுடனான போரை விரும்பவில்லை என்பதை அமெரிக்காவுக்கு நாங்கள் தெளிவு படுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nathan
ஆக 24, 2025 09:46

முதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறு பிறகு மற்ற அனைத்து விவகாரங்களையும் பேசலாம்


Shivakumar
ஆக 24, 2025 03:28

காஷ்மீர் குறித்து இந்தியாவுடன் பேச ஒன்றும் இல்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. ஒழுங்கா நீங்க பிடிச்சி வைத்திருக்கும் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு போயிட்டே இரு. வேண்டும் என்றால் பலுசிஸ்தான் பற்றி பேச இந்திய தயார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை