சீன ராணுவ வளாகத்தை பார்வையிட்ட பாக்., அதிபர்
பீஜிங்: சீனா சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அந்நாட்டின் ராணுவ வளாகத்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோர், ஐந்து நாள் அரசு முறை பயணமாக சீனாவுக்கு சமீபத்தில் சென்றிருந்தனர். இதைத் தொடர்ந்து, அதிபர் ஆசிப் அலி சர்தாரி 10 நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். சிச்சுவான் மாகாணத்திலுள்ள செங்டு நகரில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான, 'ஏவியேஷன் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் ஆப் சீனா'வின், மேம்பட்ட விமான வளாகத்தை சர்தாரி நேற்று பார்வையிட்டார். அங்கு போர் விமானங்கள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் தயாரிக்கப்படும் பரந்த வளாகத்தை அவர் பார்வையிட்டார்.