உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசம் சென்றார் ஐ.எஸ்.ஐ., தலைவர்: இந்தியாவுக்கு எதிராக சதி ஆலோசனை!

வங்கதேசம் சென்றார் ஐ.எஸ்.ஐ., தலைவர்: இந்தியாவுக்கு எதிராக சதி ஆலோசனை!

டாக்கா: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தலைவர் அசிம் மாலிக் வங்கதேசம் சென்றுள்ளார். இந்தியாவுக்கு எதிரான சதி ஆலோசனைகளில் இரு நாட்டு உளவு அமைப்பினரும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்தவரை, இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள், சதித்திட்டங்களை தடுத்து வந்தார். அதே நேரத்தில், சர்வதேச விவகாரங்கள், சார்க், எல்லை தாண்டிய தீவிரவாதம் போன்ற பலவற்றில், இந்தியாவின் நிலைப்பாட்டையே ஷேக் ஹசீனாவும் பின்பற்றி வந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g8nylg58&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், வங்கதேசத்தில் இந்திய விரோத மனநிலை கொண்ட அமைப்பினர் இடைக்கால அரசை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., வங்கதேசத்தில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ராணுவங்களுக்கு இடையிலான உறவுகள் புதிய உத்வேகம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவரின் முதல் பயணமாக, ஐ.எஸ்.ஐ., தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் மாலிக் டாக்காவிற்கு வருகை தந்துள்ளார். இது இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் புதிய பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.துபாய் வழியாக டாக்கா வந்த அசிம் மாலிக்கை, வங்கதேச ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் முகமது பைசூர் ரஹ் வரவேற்றார். வங்கதேசத்தின் பல்வேறு ராணுவ, உளவு அதிகாரிகள், பேகம் கலிதா ஜியாவின் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஐ.எஸ்.ஐ., தலைவரின் வங்கதேச பயணம், இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய நாசவேலைகள் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். சமீபத்தில், வங்கதேச ராணுவ உயர்மட்ட ஜெனரல் ஒருவர் இஸ்லாமாபாத் சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தாமரை மலர்கிறது
ஜன 23, 2025 20:53

ஷேக் ஹசினா போனபிறகு, பங்களாதேஷ் பயங்கரவாதிகளின் சொர்கலோகமாக மாறிவிட்டது.


Bye Pass
ஜன 23, 2025 20:22

இந்த இரண்டு நாடுகளுக்கும் நதிநீர் இந்தியாவிலிருந்து தான் செல்கிறது ..அவற்றை இந்தியாவிற்குள் திருப்பி விட்டாலே போதும்


V Gopalan
ஜன 23, 2025 16:49

Despite knowing the problems between Bangladesh and India, why at all the Indian Govt is still permitting the ex PM of Bangladesh? Again, it appears that more than 6 Crores Bangladeshis have settled in our country Thanks: Hindu Tamil. There are agents who are collecting Rs.50,000-00 to Rs.One lakh from a infiltrator et all. How the country is allowed to infiltrate? When US is deporting illegal immigrants, why not the India should follow the footstep?


GMM
ஜன 23, 2025 15:31

பொது சிவில் சட்டம் மற்றும் குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் அவசியம். சிறுபான்மை அந்தஸ்து நீக்கம் அவசியம். இந்திய பிறப்பு சான்று இல்லாமல், இருக்கும் சிறுபான்மை மக்கள் தான் வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில், மாதம் ஒருமுறை கையொப்பம் யிட்டு தன்னை அடையாள படுத்தி கொள்ள வேண்டும். 1750 ல் 25 மடங்கு இருந்த பாரத மக்கள் சொத்து வளம் , 1900 ல் கொள்ளை, சண்டை சச்சரவும் பின் 2 மடங்காக சுருங்கியது. சுமார் 150 ஆண்டில் இந்துக்கள் சொத்து அதிக கொள்ளை. கடந்த காங்கிரஸ் 100 ஆண்டில் நாடு கடன் பட்டு கஷ்டப்படுகிறது


KavikumarRam
ஜன 23, 2025 14:34

கூரை ஏறி கோழி புடிக்க வழியில்லையாம். இவனுங்க வானம் ஏறி வைகுண்டம் போறானுங்களாம். இது இரண்டு கிறுப்புபயலுகளுக்கும் பொருந்தும். தற்போதைய நிலையில் உலகளவில் இந்த பாலைவன அமைதி மார்க்கத்தானுங்க தான் உலகளவில் ஒருத்தனுக்கொருதன் குண்டு வச்சு கொன்னுக்கிட்டு திரியிரான். இதுல ரெண்டு இந்த இரண்டு அமைதி மார்க்கத்தானுங்களும் ஒன்னு சேர்றானுங்களாம். கூடிய சீக்கிரம் ரெண்டு கிறுக்கனுங்களும் அடிச்சிக்கிட்டு சாக வாழ்த்துகள்.


Kasimani Baskaran
ஜன 23, 2025 13:47

சுதந்திரம் வாங்கிக்கொடுத்ததற்கு நன்றி செலுத்துகிறார்கள்....


Ramesh Sargam
ஜன 23, 2025 13:04

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அந்த இரண்டு நாடுகளும், அவர்கள் பாலூற்றி வளர்க்கும் பயங்கரவாதிகளாலேயே அழியும்.


Bahurudeen Ali Ahamed
ஜன 23, 2025 12:19

பங்களாதேஷ் பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால், தன் அழிவை தானே தேடிய கதையாகும், இவர்களால் எக்காலத்திலும் இந்தியாவை அசைத்துக்கூட பார்க்க முடியாது


Kumar Kumzi
ஜன 23, 2025 11:59

இங்கு கள்ளத்தனமா இருக்கும் பங்களாதேஷ் மூர்க்க காட்டேரிகளை உதைத்து விரட்டுங்கள்


rajasekaran
ஜன 23, 2025 11:55

எல்லாம் மேல இருக்கிறவர் டிரம்ப் பார்த்து கொள்வர்.


சமீபத்திய செய்தி