உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தென் கொரியாவில் விமான விபத்து; 176 பேர் பரிதாப பலி!

தென் கொரியாவில் விமான விபத்து; 176 பேர் பரிதாப பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சியோல்: தென் கொரியாவில் நடந்த விமான விபத்தில் 176 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.பாங்காங்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 181 பேரை ஏற்றிக் கொண்டு, இன்று (டிச.,29) விமானம் ஒன்று தென்கொரியா புறப்பட்டது. தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. விமான நிலையம் சியோலுக்கு தெற்கே 300 கிமீ தொலைவிலும், வடகொரிய எல்லையில் இருந்து 200 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ytc9cxmj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீ பற்றியது. மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 176 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மன்னிச்சிருங்க...!

விமான விபத்திற்கு ஜெஜீ ஏர் விமானம் மன்னிப்பு கேட்டுள்ளது. 'துயரத்திற்கு வருந்துகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களால் முடிந்த உதவிகளையும் செய்வோம்' என விமான நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கிஜன்
டிச 30, 2024 08:33

பெல்லி லேண்டிங்.... பண்ணும்போது எரிபொருளை சுத்தமாக காலிபண்ணவேண்டும் என்பது விதி... சமீபத்தில் ...திருச்சியில் கூட எரிபொருள் தீரும்வரை வானத்தில் வட்டமடித்தார்கள்.... எப்படி எரிபொருளுடன் விமானத்தின் வயிற்றுப்பகுதி உரசும்வகையில் இறக்கினார்கள்? ஆண்டவா 2024 ஒரு காட்டு காட்டிவிட்டது .... 2025 அனைவரும் நல்லவிதமாக இருக்க அருள்புரிவாயாக


N.Purushothaman
டிச 30, 2024 09:17

இறங்கும் தருவாயில் பறவை ஒன்று மோதிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன...பறவை மோதினால் உடனடியாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது ...அதோடு அவர் முதல் தடவை முயற்சி செய்து முடியாமல் போகவே இரண்டாவது முறை மீண்டும் முயற்சி செய்துள்ளார்கள்..... அதோடு லெண்டிங் கீர் சரியாக வேலை செய்யவில்லை என்பதுவும் இன்னொரு கருத்து இருக்கிறது .. விசாரணை முடிவில் தான் உண்மையான காரணம் தெரிய வரும் ...


Kasimani Baskaran
டிச 30, 2024 07:26

சமீபமாக சூரிய மின்காந்தப்புயல் மற்றும் வெப்பம் மிக அதிகம். ஒருவேளை அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதோ என்னவோ..


என்றும் இந்தியன்
டிச 29, 2024 16:38

இது விபத்து தானா சந்தேகம் 1-கனடாவில் தரையிறங்கும்போது விமான விபத்து விமானத்தில் தீ ஆனால் 80 பிரயாணிகள் தப்பித்தார்கள்???எப்படி தென்கொரியாவில் இறந்தார்கள் 2-நேற்றுவேறு செய்தியில் இப்படி இருந்தது ரஸ்சிய bomb னாலா இல்லை இல்லை உக்ரேய்ன்bomb னாலா தென்கொரிய விமானம் தீப்பற்றியதுஎன்று இருந்தது


N.Purushothaman
டிச 29, 2024 10:04

ஆழ்ந்த இரங்கல்கள் ..உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் ....இதில் ஏதும் சதி உள்ளதா என்கிற கோணத்தில் விசாரிக்க வேண்டும் ...


MARI KUMAR
டிச 29, 2024 08:13

ஆழ்ந்த இரங்கல்


Kasimani Baskaran
டிச 29, 2024 08:01

படு சோகம். ஒரே வாரத்தில் இரண்டு விபத்துகள்.


முக்கிய வீடியோ