உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கடலில் விழுந்த விமானம்: 2 மகள்களுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் பலி

கடலில் விழுந்த விமானம்: 2 மகள்களுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் (வயது 51). ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கிறிஸ்டின் ஆலிவரின் மனைவி ஜெசிகா. இந்த தம்பதிக்கு அகிக் (வயது 10), மடிடா லிப்சர் (வயது 12) என இரு மகள்கள் உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h2np4nz3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கிறிஸ்டின் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் கரீபியன் தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். கிறிஸ்டின் தன் குடும்பத்துடன் சென்ற விமானம் சில நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் கிறிஸ்டின், மகள்கள் அகிக், மடிடா லிப்சர், விமானி ராபர்ட் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜன 07, 2024 00:45

மிகவும் சோகமான ஒரு விபத்து. வருந்துகிறேன் இறந்தவர்களை நினைத்து. அனைவரின் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்.


AMSA
ஜன 06, 2024 19:06

ஆழ்ந்த இரங்கல்


NicoleThomson
ஜன 06, 2024 18:48

வருத்தமாக இருக்கிறது , என்ன கொண்டுவந்தோம் என்ன கொண்டு போனோம் , இடையில் மதத்தை வைத்து சிலர் நம்மில் மனிதத்தை தொலைய வைக்கிறார்கள்


canchi ravi
ஜன 06, 2024 15:07

RIP


A Viswanathan
ஜன 07, 2024 08:08

ஆழ்ந்த இரங்கல்.அவர்களது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை