உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாலத்தீவு சென்றடைந்தார் பிரதமர் மோடி; கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு

மாலத்தீவு சென்றடைந்தார் பிரதமர் மோடி; கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாலே: மாலத்தீவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சென்று உள்ளார். அங்கு அவருக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து மோடி பேசினார்.தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ஸ்டாமர் முன்னிலையில், இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையழுத்தானது. பிரிட்டன் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு இன்று (ஜூலை 25) பிரதமர் மோடி மாலத்தீவு சென்று அடைந்தார்.விமான நிலையத்தில், பிரதமர் மோடியை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர். கலைநிகழ்ச்சிகளை மோடி உற்சாகத்துடன் பார்த்து மகிழ்ந்தார். 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் அவர், அந்நாட்டு அதிபர் முகமது முய்சுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Iyer
ஜூலை 25, 2025 16:43

 இதே மொஹம்மத் முஃசு தான் சீனாவின் ஆதரவுடன் பாரதத்துடன் விளையாடிப்பார்க்க முயன்றார்.  ஆனால் சீனாவின் பேராசையும், லாபநோக்கையும் பற்றி அறிந்துகொண்டவுடன் தான் இவருக்கு பாரதம் தான் உண்மையான நட்பிற்கு இலக்கணம் என்று புரிந்து கொண்டார்.


அப்பாவி
ஜூலை 25, 2025 11:29

இதுதான் நடக்குது. அமெரிக்கா சீனாவை அடக்க இந்தியாவுடன் நட்பு. ஆனா பாகிஸ்தானுக்கு நட்பா இருப்பது ஆயுதம் விக்க. அமெரிக்கா பாகிஸ்தானுடன் நட்பா இருபது இந்தியாவுக்கு தலைவலி. சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை. எனவே இந்தியா ஜெய்சங்கரை சீனாவுக்கு அனுப்பி நேசக்கரம் நீட்டுது. சீனாவுக்கு நாம வளர்வது நல்லதல்ல. எனவே நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, மாலத்தீவுகள் பங்களா தேஷுடன் நெருங்கி பழகுது. ஆக மாலத்தீவுடன் நாம இணங்கிப் போவதுதான் சீனாவுக்கு நாம் வைக்கும் செக். அமெரிக்காவுக்கு செக் வைக்க சீனாவுடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயம். அதே நேரம் அமெரிக்காவுடன் சுமுகமா ஒப்பந்தம் போடணும். நம்மளுக்கு செக் வெக்க ட்ரம்ப் இப்போது சீனாவுடன் இழைகிறார். ரஷியா போரில் வெல்வது அமெரிக்காவுக்கு நல்லதல்ல. நாம ரஷியாவுடன் ஆயில், ஏவுகணை வாங்கி போருக்கு உதவுகிறோம். எனவே இந்தியாவுக்கு டாரிஃப் அதிகமா விதிக்கப் போகுது அமெரிக்கா. பங்களாதேஷுக்கு போக விசா தேவையில்லைன்னு பாகிஸ்தானுக்கு சொல்லியாச்சு. எனவே பங்களா தேஷுடன் ஒத்துப் போக வேண்டிய கட்டாயம் நமக்கு. மொத்தத்தில் ஆளாளுக்கு ஒரு கணக்கு. ஒரு காய் நகர்த்தல் நடக்குது. அதில் ஒரு காய் நகர்த்தல் தான் ஜீ யின் மாலத்தீவு விஜயம். ஸ்ரீலங்கா போல மாலத்தீவும் நம்மிடம் கறக்கும் வரை கறக்கும்.


guna
ஜூலை 25, 2025 14:38

அர்த்தமில்லாத, மொக்கையான, சம்சீரணா.. அப்பாவி கருத்து


Chess Player
ஜூலை 25, 2025 15:15

அழகாக சொல்லி இருக்கிறீர்கள் . உண்மை


அப்பாவி
ஜூலை 25, 2025 11:17

அவார்டு மெடெல் எல்லாம் முன்னாடியே குடுத்தாச்சு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை