உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சவுதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

சவுதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

ஜெட்டா: பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சவுதி அரேபியா கிளம்பி சென்றார். இந்த பயணத்தின் போது, அரசியல், வர்த்தகம், சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு உறவை பலப்படுத்த பிரதமரின் இந்த பயணம் உதவும். மேலும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. ஹஜ் கோட்டா, பாதுகாப்பு விஷயங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dv5px5o8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன்படி ஜெட்டா நகருக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு 21 குண்டுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜெட்டா நகரில் பிரதமர் வந்து இறங்கியதும் அங்கு கூடியிருந்த இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் ' மோடி, மோடி' என கோஷம் போட்டனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி பிரதமர் சென்றார். அவரை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.முன்னதாக சவுதி அரேபியாவின் வான்பரப்பில் பிரதமர் மோடி பயணித்த விமானம் வந்ததும் அவரை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு விமானப்படை விமானங்கள் உடன் வந்தன. சவுதி அரேபியாவிற்கு 3வது முறையாக செல்லும் பிரதமர் மோடி, கடந்த 40 ஆண்டுகளில் ஜெட்டா நகருக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.சவுதி வந்ததும், பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகர் வந்தடைந்தேன். இந்த பயணமானது, இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் நட்பை பலப்படுத்த உதவும். இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

thehindu
ஏப் 22, 2025 23:35

மோடிக்கு எல்லாரும் வரவேற்புதான் கொடுக்கிறார்கள் .


thehindu
ஏப் 22, 2025 23:28

நேற்றுவரை உறவு வைத்தவர்களையெல்லாம் வசைபாடிய இந்துமதவாத வெறியர்கள் இப்போது உறவாடுவது எப்படி ?.


thehindu
ஏப் 22, 2025 22:04

சவுதியில் எப்போதும் மிலிட்டரி டேங்கர் விமானப்படை ஜெட் எல்லாம் சர்வ சாதாரணமாக திரியும்.


thehindu
ஏப் 22, 2025 21:42

மோடிக்கு சவுதியில் என்ன அலுவல்


மீனவ நண்பன்
ஏப் 22, 2025 18:02

காஷ்மீரில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை அழித்ததோடு ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி சீண்டறீங்களே


Haja Kuthubdeen
ஏப் 22, 2025 17:24

இன்று சிலருக்கு விடுமுறை...மூர்க்ஸ் பற்றி தூற்றல் வராது..சவூதி சென்ற நம் பிரதமருக்கு வாழ்த்துக்கள்.


MARUTHU PANDIAR
ஏப் 22, 2025 17:22

இது வரை இங்குள்ள மத வெறி பிரிவினை சதக் கூட்டத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் நிதி கொடுத்ததில்லை, கொடுக்கவும் மாட்டோம் என்று அறுதியிட்டு உறுதி கூற முடியுமான்னு மக்கள் கேக்கறாங்க .


RAJ
ஏப் 22, 2025 16:56

Good country. Look forward productive cooperation


சமீபத்திய செய்தி