உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சர்வதேச நலன்களுக்கான சக்தி பிரிக்ஸ் கூட்டமைப்பு: பிரதமர் மோடி புகழாரம்

சர்வதேச நலன்களுக்கான சக்தி பிரிக்ஸ் கூட்டமைப்பு: பிரதமர் மோடி புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியோடி ஜெனிரோ: பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நலன்களுக்கான சக்தியாக பிரிக்ஸ் கூட்டமைப்பு உள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். கானா, டிரினாட் அண்ட் டுபாக்கோ, அர்ஜெண்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். கானா, டிரினாட் அண்ட் டுபாக்கோ, அர்ஜெண்டினா நாடுகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரேசில் புறப்பட்ட பிரதமர் மோடி அங்கு நடைபெற இருக்கிற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தலைநகர் ரியோடி ஜெனிரோ சென்றார். அங்கு அறிவித்தபடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் லுலா ஆரத்தழுவி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இருவரும் பரஸ்பரம் கைகளை குலுக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்பபடுத்திக் கொண்டனர். இந்த சந்திப்பு, வரவேற்பு மற்றும் பிரிக்ஸ் மாநாடு குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் வலை தள பதிவில் கூறி உள்ளதாவது; உலக நாடுகளின் நன்மைக்காக பிரிக்ஸ் அமைப்பு ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கிறது. இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டை ரியோ டி ஜெனிரோவில் நடத்தியதற்காக அதிபர் லுலாவுக்கு நன்றி. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நலன்களுக்கான சக்தியாக பிரிக்ஸ் அமைப்பு இருக்கிறது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூலை 06, 2025 20:19

எங்க நலனிலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள் பிரதமரே என்று ராகுல் போன்ற எதிர்க்கட்சியினர் அழாதகுறையாக கேட்கலாம் வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது.


Krishna Gurumoorthy
ஜூலை 06, 2025 21:40

நேஷனல் ஹெரால்டு வழக்கில உங்கள் தலைவரை வெளியே விட்டு வைத்ததே தவறு என்று புலம்பல் சொல்லுங்கள்


புதிய வீடியோ