உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: வாடிகன் அறிவிப்பு

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: வாடிகன் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம்: மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை நடைபெறும் என வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், 88, இத்தாலியின் வாட்டிகன் சிட்டியில் நேற்று காலமானார்.போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கிற்கான தேதியை கார்டினல்கள் அறிவித்தனர். அவரது இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d37m4vsk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே, திறந்த சவப்பெட்டியில் போப் பிரான்சிஸ் உடல் இருக்கும் புகைப்படம், வீடியோவை வாடிகன் வெளியிட்டது. சிவப்பு அங்கிகளுடன், பிஷப் ஆடை அணிவிக்கப் பட்டு உள்ளது. போப் பிரான்சிஸ் உடல் அவர் வசித்த சாண்டா மார்டா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Priyan Vadanad
ஏப் 22, 2025 16:48

பிரார்த்தனை செய்வோம்


பிரேம்ஜி
ஏப் 22, 2025 16:43

அவரவர் மத நம்பிக்கை சார்ந்த விஷயம்! நாம் கருத்து சொல்லத் தேவையில்லை!


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 22, 2025 16:03

இறந்தவரின் பிணத்தை ஒரு நாளுக்கு மேல் வைத்திருந்ததால் அவருடைய ஜீவனுக்கு / மறுமைக்கு அது கெடுதல் .....


Priyan Vadanad
ஏப் 22, 2025 16:50

தர்மராஜ் தர்மத்தினம் அறியவேண்டியது. ஒவ்வொரு மதத்துக்கும் தனிப்பட்ட நம்பிக்கை, நடைமுறை மற்றும் வழிமுறை. அதன்படி போப்பின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.


மீனவ நண்பன்
ஏப் 22, 2025 20:20

மூணு நாளில் உயிர்த்தெழுதல் நடக்கலாம் ..


புதிய வீடியோ