உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கிறிஸ்துமஸ் அன்று போர் நிறுத்தக் கோரிக்கை நிராகரிப்பு; ரஷ்யாவின் செயலால் போப் 14வது லியோ வேதனை

கிறிஸ்துமஸ் அன்று போர் நிறுத்தக் கோரிக்கை நிராகரிப்பு; ரஷ்யாவின் செயலால் போப் 14வது லியோ வேதனை

ரோம்: கிறிஸ்துமஸ் தினத்தன்று போர் நிறுத்தம் செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்திருப்பது வேதனை அளிப்பதாக போப் 14வது லியோ தெரிவித்துள்ளார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022, பிப்., முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.இதனிடையே, நாளை (டிசம்பர் 25) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒருதினம் மட்டும் போர்களை நிறுத்தி, உலக அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று போப் 14வது லியோ கோரிக்கை விடுத்தார். ஆனால் போப்பின் இந்தக் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து விட்டது.இதனால், வேதனை அடைந்த போப் 14வது லியோ ரோமிற்கு அருகே உள்ள காஸ்டல் கண்டால்போ இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது; கிறிஸ்துமஸ் தினத்தன்று போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்யா நிராகரித்திருப்பது எனக்கு வேதனையளிக்கிறது. எங்கள் கடவுளின் பிறந்த நாளில் குறைந்தபட்சம் ஒருநாளாவது, சமாதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நல்லெண்ணம் கொண்ட அனைவருக்கும் மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன். இந்தக் கோரிக்கையை அவர்கள் கேட்பார்கள் என்று நம்புகிறேன். உலகம் முழுவதிலும் 24 மணிநேர சமாதானம் நிலவும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.இந்த மாதத்தின் துவக்கத்தில் போப் 14வது லியோ உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார். அப்போது, உக்ரைனுக்கு வருமாறு போப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், ' இது எப்போது சாத்தியமாகும் என்று சொல்ல முடியாது,' என்று போப் 14வது லியோ பதிலளித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Barakat Ali
டிச 24, 2025 18:15

அப்படியா ???? சிலுவைப்போர் என்றால் என்ன போப் அவர்களே ????


djivagane
டிச 24, 2025 15:58

இதேய் இஸ்ரேலிடேமும் சொல்லெவேண்டும்


தினகரன்,சென்னை
டிச 24, 2025 14:15

நீங்க உங்க மதமாற்ற செயல்களை நிறுத்தினாலே உலகத்தில் சமாதனம் ஏற்படும்.


ஏனோக்
டிச 24, 2025 14:05

அந்த ஒரு நாள் மடடும் ரஷ்யா மீது உக்ரைன் தாக்கி அழித்து விட திட்டம்.


Madras Madra
டிச 24, 2025 12:48

மத்த நாள்ல கொல்லலாமா ? என்ன கொள்கை இது ?


Rathna
டிச 24, 2025 12:45

எப்படி ராமாயணம் மற்றும் மஹாபாரதம் கட்டு கதைகள் என்று பாலைவன சமூகங்கள் சொல்கிறதோ அதேபோல, இயேசு என்பவர் ரோமர்கள் உலகத்தை கட்டி ஆள கண்டுபிடிக்கப்பட்ட தூதர் என்று பல அமெரிக்கா ஆங்கிலேய அறிஞர்கள் சொல்கிறார்கள். ஏன் என்றால் இயேசு இறந்ததாக சொல்லப்படும் ஆண்டில் இருந்து அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு அவருக்கு மிக பெரியதாக வழிபாடோ, திருச்சபையோ இல்லை. அவரே ரோமினிய கவர்னரால் கொல்லப்பட்டார். ரோமானிய அரசன் கான்ஸ்டான்டின் கிபி 313 இல் தான் முதல் கத்தோலிக்க சபையை நிறுவினார். இது போல பல வதந்திகள்.


Ramanujadasan
டிச 24, 2025 12:38

அய்யயோ , இப்படி வேதனை பட்டு , இவர் பாட்டுக்கு துப்பாக்கியை தூக்கி கொண்டு ருசியாவை எதிர்த்து போரிட கிளம்பி விட போகிறார் . உடனே தடுத்து விடவும்


Anand
டிச 24, 2025 12:29

முதலைக்கண்ணீர் வடிக்கும் இவன் வேதனைப்பட்டு என்ன செய்து கிழிக்கப்போகிறான்?


Perumal Pillai
டிச 24, 2025 12:14

இந்த ஆளு திராவிடர்கள் போல ஒரு சுமாரான அரசியல்வாதி . யாருமே சீரியஸ் ஆக எடுத்து கொள்ள மாட்டார்கள் .


prakash
டிச 24, 2025 12:12

அவ்வளவு வேதனை இருந்தா போய் சாவுடா, இந்த போதனை சொல்லி எத்தனை ராஜ்யம் அழித்தீர்கள்! இனி மக்கள் ஏமாற மாட்டார்கள்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை