உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உஸ்பெகிஸ்தான் மாஸ்டர் கோப்பை செஸ் தொடர்: பிரக்ஞானந்தா சாம்பியன்

உஸ்பெகிஸ்தான் மாஸ்டர் கோப்பை செஸ் தொடர்: பிரக்ஞானந்தா சாம்பியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானில் நடந்த மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடரில் தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் 5.5 புள்ளிகளை பெற்றனர். இதனையடுத்து சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இரண்டு சுற்றுகளாக நடந்த டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்ற பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.இந்த வெற்றியின் மூலம் சர்வதேச செஸ் தரவரிசை பட்டியலில் 11.3 புள்ளிகள் அதிகம் பெற்ற பிரக்ஞானந்தா 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். குகேஷ் 5வது இடத்தில் உள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Iyer
ஜூன் 27, 2025 21:08

நல்வாழ்த்துக்கள். இந்தியாவில் ஒரு CHESS COLLEGE ஆரம்பித்து இளம் வயதில் இருந்தே TRAINING கொடுத்து வந்தால் CHESS CHAMPIONSHIP ல் இந்திய எப்போதுமே முன்னணியில் இருக்கும்


குமார்
ஜூன் 27, 2025 20:48

வாழ்த்துக்கள்


Ramesh Sargam
ஜூன் 27, 2025 20:29

மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைத்து வெற்றிபெற்றவர்களுக்கும்.


புதிய வீடியோ