உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு எதிரொலி: 100 சதவீத வரி விதிப்பில் பின் வாங்கிய அமெரிக்கா

அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு எதிரொலி: 100 சதவீத வரி விதிப்பில் பின் வாங்கிய அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தென் கொரியாவில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேச்சு நடத்த உள்ள நிலையில், சீனாவுக்கு 100 சதவீத வரி விதிப்பை கைவிடுவதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.சீனாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, நவ., 1ம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும், 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தார். ஏற்கனவே சீனப் பொருட்களுக்கு, 30 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு அமலில் உள்ள நிலையில், தற்போது அறிவித்த வரிவிதிப்பால் 130 சதவீதமாக வரி உயர்வு அடைந்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு, சமீபத்தில் சீனா அறிவித்துள்ள அரிய கனிமங்கள் ஏற்றுமதிக்கான புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்கா தன்னிச்சையான இரட்டை நிலைபாட்டை கடைப்பிடிக்கிறது. நாங்கள் போராட பயப்படவில்லை. எதிர் நடவடிக்கை எடுப்போம் என 100 சதவீத வரி அறிவித்த அமெரிக்கா முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஏ.பி.இ.சி., எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31ம் தேதி மற்றும் நவம்பர் 1ல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தென்கொரியா செல்லும் டிரம்ப் அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த உள்ளார்.இந்த சூழலில், சீனாவுக்கு 100 சதவீத வரி விதிப்பை கைவிடுவதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இது குறித்து, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியதாவது: சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என்ற டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல் நீங்கி விட்டது.சீன துணை பிரதமர் உடன் நாங்கள் இரண்டு நாள் சந்திப்பை மிகச் சிறப்பாக நடத்தினோம். சீனாவுடன் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

kalyanasundaram
அக் 27, 2025 17:06

he is American papoooooo


தமிழன்
அக் 27, 2025 10:38

சீனா பானா அப்படியே மெயின்டைன் பன்னு


V K
அக் 27, 2025 10:29

தாத்தா டிரம்ப் உடன் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் நடப்பது ஆசியான் உச்சி மாநாடு இதில் அமெரிக்காவுக்கு என்ன வேலை


Keshavan.J
அக் 27, 2025 10:26

இன்று முதல் டிரம்ப் டுபாக்கூர் டிரம்ப் என்று அழைக்கப்படுவார்


V RAMASWAMY
அக் 28, 2025 10:49

துக்ளக் என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.


SP
அக் 27, 2025 09:52

ஒரு நாட்டோட அதிபர்போல் நடந்துகொள்ளவில்லை. ரௌடி மாமூல் கேட்பதுபோல் உள்ளது


Appan
அக் 27, 2025 09:30

சொல்வதெல்லாம் நாடகம். இப்போ பாருங்கள் சீனாவின் முன் வாலைசுருட்டி ஆமாம் சாமி போட்டு கொண்டு இருக்கிறார். அமெரிக்க இல்லாமல் சீன செயல் பட முடியும். சீனாவின் 14% பொருளாதாரம் தான் அமெரிக்காவை சார்ந்து உள்ளது. சீன இப்போ ஆசியான் நாடுகளில் கோலோய்ச்சு கிறது. உலகில் வல்லமை தான் பேசும். இந்திய இதை உணர்ந்து செயல்பட்டனும். ஜனநாயகம், சுதந்திரம் என்று அரசு செயல்பாடுக்களை மக்கள் முடக்குகிறார்கள் விளைவு இந்தியாவில் ஏதும் உருப்படியாக செய்ய முடியவில்லை. இந்தியாவின் புல்லட் ரயில் புராஜெக்ட் 10 வருடமாக தத்தளிக்கிறது. நிலம் வாங்குதல் ஒரு பெரிய வேலை. இப்படி 10 ஆண்டுகள் இழுத்தாள் எப்படி இந்தியாவில் பொருளாதாரம் வளரும். மற்றும் மதம், மொழி சார்ந்து போராட்டம். டிரம்ப் இந்தியாவை பாகிஸ்தானோடு ஒப்பிடுகிறார், ஆனால் சீனாவை பார்த்து கும்பிடுகிறார். இந்தியர்கள் விழிப்பு பெறனும்.


duruvasar
அக் 27, 2025 09:27

விந்தை கூட்டம் .


Ravi Chandran.K , Pudukkottai
அக் 27, 2025 09:19

அடக்கி பாக்குறேன். இல்லன்னா அடங்கி போறேன்! எப்புடி இந்த பஞ்சாயத்தோட பாலிசி ?


Indian
அக் 27, 2025 09:14

நம் நாட்டு பிரதமரும் இது போல் சந்தித்து பேச வேண்டும். இதை விட்டு சந்திப்பை தவிர்ப்பது நல்லதல்ல .


Ramesh Sargam
அக் 27, 2025 08:46

சீனாவுக்கு 100 சதவீத வரி விதிப்பை கைவிடுவதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது. ஆக டிரம்ப்பின் இந்த வரிவிதிப்பு நாடகம், உண்மையில் அமெரிக்க நாட்டின் வருமானத்தை உயர்த்துவது அல்ல. அவருடைய பேச்சுக்கு எதிர் பேச்சு பேசுபவர்களை தண்டிப்பது மட்டுமே. அவருடைய ஆதரவாளர்கள் நினைத்திருக்கலாம், ஆஹா, நம்ம அதிபர் நாட்டுக்கு எப்படி வருமானத்தை சேர்க்கிறார் என்று. இந்த பின் வாங்கும் நாடகத்திலிருந்து அவர்கள் டிரம்ப்பை பற்றி நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்.


சமீபத்திய செய்தி