உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவுக்கு மேலும் 100 சதவீதம் வரி: அறிவித்தார் அதிபர் டிரம்ப்

சீனாவுக்கு மேலும் 100 சதவீதம் வரி: அறிவித்தார் அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நவம்பர் 1ம் தேதி சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். நோபல் பரிசு கிடைக்காத நிலையில் அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் தொடங்கினார். அவர் மீண்டும் வர்த்தகப்போரை தீவிரப்படுத்தி உள்ளார்.இது குறித்து, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நவம்பர் 1ம் தேதி முதல், தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக, உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் சீனா வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. அதிக வரி விதித்தால் அமெரிக்காவில் மின்சாதனங்களின் தயாரிப்பு பாதிக்கும் அபாயம் இருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xaz8ypxz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த திட்டம் பல ஆண்டுகளுக்கு முன் அவர்களால் வகுக்கப்பட்டு உள்ளன. இது சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, பிற நாடுகளுடன் கையாள்வதில் ஒரு தார்மீக அவமானம். சீனா இந்த முன்னோடியில்லாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல், சீனாவுக்கு மேலும் 100 சதவீத வரி விதிக்கப்படும். அனைத்து முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம். வர்த்தகத்தில் நியாயமற்ற நடைமுறைகளை சீனா கையாள்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.ஏற்கனவே 30 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், நவம்பர் 1ம் தேதி முதல் சீனாவுக்கு வரி 130 சதவீதமாக உயருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன்

2025ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ, ''எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவின்துன்பப்படும் மக்களுக்கும், எனக்கு தொடர்ந்துஉறுதியான ஆதரவை அளித்து வரும் அதிபர் டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன்'' என தெரிவித்தார்.

டிரம்ப் பதில்

இது குறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா எனது சார்பாக நோபல் பரிசு வாங்கிக் கொண்டதாக சொன்னார். போனில் பேசிய மரியாவிடம் நோபல் பரிசை கொடுக்கும் படி நான் கேட்கவில்லை. அவர் மிகவும் நல்லவர், நான் அவருக்கு உதவி செய்து வருகிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Indhuindian
அக் 11, 2025 13:48

நாச்சியப்பன் பாத்திர கடையிலேந்து ஒண்ணுக்கு ரெண்டா மெடல் பார்சல்


பெரிய ராசு
அக் 11, 2025 11:17

அந்த அளவுக்கு , ஆனா தமிழ்நாடு எனும் இடஒதுக்கீடு வேணும் ,


ஜெய்ஹிந்த்புரம்
அக் 11, 2025 11:01

தென்னை மரத்திலே தேள் கொட்டிச்சாம், பனைமரத்திலே நெறி கட்டிச்சாம் கதையா நோபல் பரிசு கெடைக்கல்ஙை என்பதற்காக சீனா மேலே இன்னும் 100% வரி போட்டு சொந்த நாட்டு பங்கு சந்தையை குப்புற அடிச்சிவிட்டது....


Natarajan V
அக் 11, 2025 10:49

அமெரிக்கா மார்க்கெட் 4% டவுன்


Sun
அக் 11, 2025 10:25

போன தடவ அமெரிக்க அதிபரா இருந்தப்ப ஓரளவு நல்லாத்தானே இருந்தார்.


Santhakumar Srinivasalu
அக் 11, 2025 10:19

இந்த அறிவிப்பால் அமெரிக்கா மக்களும் பொருளாதாரமும் ரொம்ப சீரழியும்.


Shekar
அக் 11, 2025 09:30

100 சதம் வரிவிதித்தால் அதை வாங்கும் அமெரிக்கர்கள்தானே அதையும் சேர்த்து கட்டவேண்டும்


shyamnats
அக் 11, 2025 09:05

இவருடைய பொறுப்பில்லாத விளையாட்டு எப்போதான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை . நம்ம ஊர்ல ராவுல் வின்சி, பிரியங்கா போல செயல் படுகிறார். முப்பெரும் நாடுகள் ரஸ்யா , இந்தியா பிரேசில் மற்றும் சீனா ஒன்றிணைந்து அமெரிக்காவிற்கு எதிரே செயல் பட வேண்டிய நேரம். அமெரிக்கா டாலரை கீழிறக்க வேண்டும். 200 ஆண்டுகளுக்கும் மேலான அமெரிக்கா ஆதிக்கத்தை ஒழிக்க பாடு படவேண்டும். இதற்கு உள்நாட்டு பொருட்கள் உற்பத்தி மற்று ம் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் அவசியம்.


கடல் நண்டு
அக் 11, 2025 08:59

100 என்ன 1000 விதித்தாலும் , ஒன்னும் பண்ண முடியாது..உலகளவில் அமெரிக்காவுக்கென இருந்த மரியாதையை இந்த கொஞ்சம் கொஞ்சமாக குழி தோண்டிப் புதைத்து வருகிறார் என்பது மட்டுமே நிதர்சன உண்மை..


ديفيد رافائيل
அக் 11, 2025 08:56

சீனா அமெரிக்காவுக்கு 260 சதவீத வரி விதிக்க வேண்டும்.


தியாகு
அக் 11, 2025 09:01

உங்க பெயரை முதலில் தமிழில் எழுதவும், பிறகு அமெரிக்காவிற்கு அட்வைஸ் செய்யலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை