UPDATED : ஜூலை 04, 2024 12:48 PM | ADDED : ஜூலை 04, 2024 11:43 AM
வாஷிங்டன்: ‛‛ அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகவில்லை எனவும், வெற்றி பெறுவோம்'' எனவும் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் களமிறங்கி உள்ளனர். வயது மூப்பு காரணமாக பைடனால், முழு திறனுடன் பிரசாரம் செய்ய முடியுமா என சந்தேகம் எழுப்பப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pxoxc886&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 கடந்த வாரம் ஜோ பைடன் டொனால்ட் டிரம்ப் இடையே நேரடி விவாதம் நடந்தது. இதில் பைடன் தடுமாறினார். இதனையடுத்து அவருக்கு பதில், வேறொருவரை போட்டியிட வைக்க வேண்டும் என ஜனநாயக கட்சி சார்பில் கோரிக்கை எழுந்தது. பைடனுக்கு நெருக்கடியும் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மீண்டும் அதிபராகும் முயற்சியை கைவிடுமாறு பைடனை வலியுறுத்த 25 எம்.பி.,க்கள் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, போட்டியில் இருந்து விலகுவது குறித்து பைடன் பரிசீலனை செய்து வருவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இதனை வெள்ளை மாளிகை மறுத்தது.இந்நிலையில் பைடன் கூறுகையில், தேர்தலில் இறுதி வரை களத்தில் இருப்பேன். நாங்கள் வெற்றி பெறுவோம். ஜனநாயக கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்றும் போது நாங்கள் எப்போதும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.