உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்; பிரதமர் மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சு

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்; பிரதமர் மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - நியூசிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்.இது குறித்து நியூசி., பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப்பதிவில் கூறியிருப்பதாவது; தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரி 95 சதவீதம் குறைக்கவோ அல்லது நீக்கவோ வழிவகை செய்கிறது. இதனால், அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தில் ஏற்றுமதி ரூ.9,863 கோடியில் இருந்து ரூ.11,650 கோடியாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம் நியூசிலாந்தில் வேலைவாய்ப்பு, ஊதியம் உள்ளிட்டவற்றை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், இந்த ஒப்பந்தம் நமது இரு நாடுகளுக்கிடையேயான வலுவான நட்பை மேலும் வலுப்படுத்துகிறது. உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நியூசிலாந்து வர்த்தகத்தை 14 லட்சம் இந்தியர்கள் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகிறது. இதுபோன்ற புதிய வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம், நாட்டின் பொருளாதாரம் வளர்வதற்கும், நியூசிலாந்து மக்களும் முன்னேறுவதற்கும் உதவுகின்றன. இதற்கேற்றாற் போல, அடிப்படைகளை சரிசெய்து எதிர்காலத்தை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி