மேலும் செய்திகள்
இந்திய வம்சாவளி மேயர் மம்தானி vs டிரம்ப் மோதலுக்கு முற்றுப்புள்ளி
8 hour(s) ago | 15
மியான்மரில் சிக்கி தவித்த 370 இந்தியர்கள் மீட்பு
11 hour(s) ago | 3
ஜோகன்னஸ்பர்க்; தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா வரவேற்றார்.தென் ஆப்ரிக்காவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய புலம்பெயர்ந்தோரின் உற்சாகமான கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தார். கணபதி பிரார்த்தனை, சாந்தி மந்திரம் மற்றும் பிற தெய்வீக பிரார்த்தனைகளுடன் அவருக்கு இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர். ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். ஜி20 உச்சி மாநாட்டு நடக்கும் இடத்திற்கு வந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா வரவேற்றார். உலகத் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உலகின் வளரும் நாடுகளின் பிரச்னை குறித்து மோடி விவாதிக்கிறார். மாநாட்டில் அவர் உரை நிகழ்த்த உள்ளார். முதலில் 2022ம் ஆண்டு இந்தோனேஷியாவிலும், 2023 ம் ஆண்டு இந்தியாவிலும், 2024ம் ஆண்டு பிரேசிலிலும் ஜி20 உச்சி மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.
8 hour(s) ago | 15
11 hour(s) ago | 3