உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்

மாஸ்கோ : உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி எடுத்து, உக்ரைனும் அதற்கு ஒத்துழைத்தால், பேச்சுவார்த்தையில் பங்கேற்க ரஷ்யாவும் தயங்காது' என, அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.ரஷ்யா- - உக்ரைன் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் தொடர்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா தலைமையில் மேலை நாடுகள் ஆயுதங்களும், நிதியும் அளித்து வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிராக அவை பொருளாதார தடைகளையும் விதித்துஉள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yk40qpis&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மலிவு விலை

ரஷ்யாவுடன் நல்லுறவு பாதிக்காத வகையில், இந்தியா இந்தப் பிரச்னையில் விலகி நின்றது. அமெரிக்காவின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இது, அப்பட்டமான ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு என்று மேலைநாடுகள் விமர்சனம் செய்வதை, மோடி அரசு கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், ஜூலை மாதத்தில் பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். அதிபர் புடினை சந்தித்து பேசினார்; உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வரும்படி வலியுறுத்தினார். எந்த பிரச்னைக்கும் போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்றும் சுட்டிக் காட்டினார். இது, புடினுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், மேலைநாடுகளை முழுவதுமாக பகைத்துக் கொண்ட நிலையில், இந்தியாவின் நட்பை இழக்க அவர் தயாராக இல்லை. கச்சா எண்ணெயால் கிடைத்து வரும் வருமானத்தையும் இழக்க விரும்பவில்லை.இதையடுத்து, கடந்த மாதம் உக்ரைன் சென்றார் பிரதமர் மோடி. அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்; நேரத்தை வீணடிக்காமல் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவுடன் பேச்சு நடத்தும்படி வலியுறுத்தினார். அதற்கு தேவையான உதவிகளை செய்ய, இந்தியா தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.ஜெலன்ஸ்கி முகத்தை இறுக்கமாகவே வைத்திருந்தார். இந்தியா மட்டும் நடுநிலையை கைவிட்டு, ரஷ்யாவுடன் தன் உறவை திருத்திக் கொண்டால் போர் உடனே முடிந்து விடும் என, மோடி முன்னிலையிலேயே இந்திய செய்தியாளர்களிடம் சொன்னார். மோடி அதற்கு பதிலடி கொடுத்தார். போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; போரே வேண்டாம் என்று அமைதியின் பக்கம் நிற்கிறது என்றார். புடினை மோடி அரவணைத்ததை விமர்சித்த மேலைநாடுகள், ஜெலன்ஸ்கியையும் அதே பாணியில் மோடி கட்டிப்பிடித்ததை விமர்சிக்க வார்த்தை கிடைக்காமல் திகைத்தன. உக்ரைனை வீழ்த்தி, துரிதமாக போரை முடித்து விடலாம் என்று நம்பிய ரஷ்யாவுக்கு அப்படி நடக்காததால் ஏமாற்றம். அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் பின்னால் நிறுத்திக் கொண்டு வாய்வீச்சு காட்டினால் ரஷ்யா பின்வாங்கி விடும் என, எதிர்பார்த்த உக்ரைனுக்கு அப்படி நடக்காததால் ஏமாற்றம். இன்னும் எத்தனை காலம் தான் வெளிநாடுகளின் போர்களில் மூக்கை நுழைத்து பணத்தையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுப்பது என அமெரிக்காவிலும் அதிருப்தி பரவுகிறது. இப்படி எல்லா தரப்புக்கும் இக்கட்டான நேரத்தில், மோடியின் முன்முயற்சி புதிய கதவுகளை திறந்துள்ளது.

மதிக்கிறேன்

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நேற்று ஒரு மாநாடு நடந்தது. அதில் பேசிய புடின், ''உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நட்பு நாடுகள் முயற்சி செய்கின்றன. நண்பர்களின் முயற்சிகளை மதிக்கிறேன். ''போர் நிறுத்த பேச்சை தொடர உக்ரைன் ஆர்வமாக இருந்தால், அதில் எனக்கும் சம்மதமே,'' என்றார்.இது குறித்து ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மட்டுமின்றி அமெரிக்காவுடனும் சுலபமாக பேசக்கூடியவர் இந்திய பிரதமர் மோடி. இருதரப்பின் எண்ணங்களையும் நேரடியாக கேட்டறிந்து, அமைதிப் பேச்சை வழிநடத்தவும் மோடியால் முடியும். சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் செல்வாக்கை வெளிப்படுத்த இது சரியான சந்தர்ப்பம்.இவ்வாறு அவர் கூறினார். சீனாவுக்கும், பிரேசிலுக்கும் இரு தரப்புடனும் விவாதிக்க வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என்பதால், புடின் குறிப்பிட்ட மூன்று நாடுகளில் இந்தியா மட்டுமே நிற்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

raj
செப் 06, 2024 23:08

அப்படி நடந்து விட்டால் பப்புவிற்கு நிறைய ஜெலுசில் தேவைப்படும்


Ramesh Sargam
செப் 06, 2024 21:59

மோடிஜியின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, போரை முடிவுக்கு கொண்டுவந்து, உயிர்பலிகளை தடுக்க வேண்டியது புடின் மற்றும் ஜெலென்ஸ்கியின் கடமை.


hariharan
செப் 06, 2024 15:02

நல்லது நடந்தால் உலகிற்கே மகிழ்ச்சி.


aaruthirumalai
செப் 06, 2024 12:48

இதில் இந்தியா வெற்றியடைந்தால் மிகப்பெரிய கெளரவம் கிடைக்கும்.


RAJ
செப் 06, 2024 10:53

யாரென்று புரிகிறதா... அது மோடிஜி .. தன்னலம் இல்லாத தலைவர்...


VENKATASUBRAMANIAN
செப் 06, 2024 08:29

இதுபோன்ற சர்வதேச அங்கீகாரம் கிடைப்பது எவ்வளவு முக்கியம். இங்குள்ள ....களுக்கு இது தெரியாது. தெரிந்தாலும் மோடியை எதிர்க்க வேண்டும். இதுதான் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடு. அதற்கு ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் ஒத்து


Kasimani Baskaran
செப் 06, 2024 05:53

ரஷ்ய தனது நிலைப்பாட்டை மாற்றி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டால் அது இந்தியாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றுதானே சொல்ல வேண்டும். பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கவில்லை என்றால் இந்தியா ஐநாவிலிருந்து வெளியேறுவதே நல்ல மரியாதையாக இருக்கும்.


C S K
செப் 06, 2024 03:33

தினமலர் பிறந்த நாள் சிறந்த நாளாக வாழ்த்துகிறேன். மோடி என்னும் ஆளுமை இன்றைய காலகட்டத்தில் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த நிச்சயம் முயற்சி செய்தால் நல்லது விளையும். மொத்த உலகத்துக்கும் நிம்மதி கிடைக்கும். போரால் என்ன நம்மை கிடைக்கும் என்று முன்பொரு காலத்த்தில் அரசராக வாழ்ந்த அசோக சக்கரவர்த்திக்கு கலிங்கத்து போர் புதிய வைத்ததை நாம் படித்திருக்கிறோம். உணவு உற்பத்தியில் சுணக்கம் வந்ததால் எத்தனையோ ஆப்பிரிக்கா நாடுகளில் மக்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள. உலகத்தில் உள்ள நாடுகளை ஜெர்மனி தரவரிசை படுத்தி ஹங்கர் இண்டெக்ஸ் வெளியிட்டால் போதும் என்றுநினைக்கிறார்கள் போலும் அந்த பட்டினி நிலையை மாற்ற ஒன்றும் செய்யமல் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள அறிவு ஜீவிகள் பேசுவதை காட்டிலும் முயற்சி செய்கின்ற மோடியை பாராட்ட வேண்டவே வேண்டாம். வழக்கம் போல் சேற்றை அழகி வீசும் ஊடகங்கள் செய்வதை மாற்றி கொள்ள போவதில்லை. ஆனாலும் சனாதனம் சொல்வதை அதாவது சர்வ ஜனோ சுகினோ பவந்து என்பதை நம் நாட்டின் ஆன்மிகம் விட போவதில்லை. முயற்சி திருவினை ஆக்கும் என்கிற வள்ளுவர் வாக்கு என்று எப்பொழுதும் பொய்யாகாது. அதனால் தானே அவரை பொய்யா மொழி புலவர் என்று சொல்கிறோம். அறம் எப்பொழுதும் வெல்லட்டும்.


முக்கிய வீடியோ