உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமைதிக்காக அவர் நிறைய செய்கிறார்: டிரம்ப் குறித்து புடின் பாராட்டு

அமைதிக்காக அவர் நிறைய செய்கிறார்: டிரம்ப் குறித்து புடின் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: அமைதிக்காக அவர் நிறைய செய்கிறார் என டிரம்புக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு தெரிவித்துளார்.ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடியதற்காக வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினோ மச்சாடோ 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது:உலகில் சமாதானத்தை மேம்படுத்துவதற்கு பெரும் பங்களிப்பை டிரம்ப் செய்துள்ளார். டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரா என்பதை தீர்மானிப்பது அவரது தனிச்சிறப்பு அல்ல. காசாவில் அமைதி உண்மையிலேயே ஒரு வரலாற்று சாதனை. இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் பாராட்டு

இஸ்ரேல் பிரதமர் சமூக வலைதளத்தில் டொனால்டு டிரம்பைப் பாராட்டினார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: நோபல் குழு அமைதியைப் பற்றிப் பேசுகிறது. அதிபர் டொனால்டு டிரம்ப் அதைச் சாத்தியமாக்குகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
அக் 11, 2025 06:35

எல்லை கடந்த சீன ஆதிக்கத்தை தடுத்து விடலாம் என்று டிரம்ப்பர் நினைக்கிறார் - ஆனால் அது சாத்தியமில்லை. சீன அரசு அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களை பெரிய அளவில் வாங்க அனுமதித்தது தவறு. வரி மேல் வரி போட்டு அதிருத்தியாளர்களையே உருவாக்க முடியும். கம்யூனிசம் ஊக்கம் பெறுவது உலகுக்கு பின்னடைவே - அதே சமயம் அமெரிக்கா வர்தகப்போரில் ஈடுபடுவது சிறிதளவு நன்மைகளை மட்டுமே கொண்டுவரும்.


Jay Al
அக் 11, 2025 05:11

சினிமா பாத்து அதில் நடிக்கிற கதாநாயன் என்ற ஒரே காரணத்துக்காக ,, முதல்வர் ஆக்கும் தமிழார் சினிமாக்காரன் ஓட்டு போடும் தமி லர் களை விட டிரம்ப் ஒன்னும் தப்பா இல்லை


Nathan
அக் 11, 2025 05:09

அவருக்கு உன்மையில் உலக அமைதியின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றால் பல நாடுகளின் மீது விதிக்கப்பட்ட கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும் அந்த நாட்டில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆட்சியாளர்கள் அல்ல


Nagercoil Suresh
அக் 11, 2025 04:50

சண்டையை மூட்டி விட்டு குளிர் காய்வது யார் என்பதும் ஆராயப்படவேண்டும்...அதிபர் ட்ரும்ப் ஒரு வேளை சில சண்டைகளை நிறுத்தியிருக்கலாம் அல்லது அதற்காகான முயற்சிகளையும் எடுக்கலாம் ஆனால் இதற்கு முன்னால் இருந்தவர்கள் நினைத்திருந்தால் உக்ரைன் ரஷ்யா சண்டை வந்திருக்காது அதுனால தான் நோபல் பரிசுக்கு கோபம் வந்திருக்கும்...


Ramesh Sargam
அக் 11, 2025 01:12

இனி வரும்காலத்தில் நிகழப்போகும் போர்களை டிரம்ப் தடுத்துநிறுத்த முயற்சிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம். Bad luck this time Mr.Trump. Better luck next time. Please continue your efforts in stopping wars between nations in future too. முயற்சி திருவினையாக்கும். Which means effort will pay.


சிட்டுக்குருவி
அக் 11, 2025 00:17

காசாவில் இன்னும் பணிகள் தொடங்கவேயில்லை . பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டு காசா பாலஸ்தீனத்தின் ஒரு அங்கமாக்கப்பட்டு ஹமாஸ் என்ற தீவிரவாதிகளை பாலஸ்தீனத்தின்,காசா உட்பட ,எல்லைகளுக்கப்பால் விலகிடும்போதுதான் அமைதி ஏற்படுத்தப்பட்டதாகும் .அது எப்போது நிறைவேறுமா அப்போது அமைதிக்கான பரிசு கட்டாயம் கிடைக்கும் .அமைதிவரப்போகின்றது என்பதை வைத்து நோப்ல் பரிசு கிடைக்காது .


Saai Sundharamurthy AVK
அக் 10, 2025 22:43

வேறு வழியில்லை.உலக நாடுகள் எல்லாமே உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, டிரம்பின் கோபத்தை தணிக்க அவரது தலையில் ஐஸ் வைத்தால் தான் முடியும் போல் தெரிகிறது........


சமீபத்திய செய்தி