உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய அதிபர் வேட்பாளராக பெயரை பதிவு செய்தார் புடின்

ரஷ்ய அதிபர் வேட்பாளராக பெயரை பதிவு செய்தார் புடின்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டி அதிபர் வேட்பாளராக தனது பெயரை விளாடிமிர்புடின் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.ரஷ்யாவில் 2000-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ அதிபராக பொறுப்பேற்றார். தற்போது அதிபராக உள்ள புடினின் பதவி காலம் வரும் (2024) மே மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில் ரஷ்ய பாராளுமன்ற மேல்சபை கூட்டத்தில் ரஷ்ய அதிபர் தேர்தலை 2024ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி நடத்துவது என முடிவு செய்து சபை தலைவர் வேலண்டினா மேட்டிவியங்கோ தீர்மானம் கொண்டு வந்தார். பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து 4 முறை அதிபராக இருக்கும் புடின் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து தனது கட்சி சார்பில் மீண்டும் அதிபர் வேட்பாளராக தன் பெயரை மத்திய தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ளார். இத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானால் 2036ம் ஆண்டு வரை அவர் அதிபர் பதவியில் நீடிப்பார். இதற்கான வழி வகை செய்ய ஏற்கனவே சட்டதிருத்தத்தை முன்கூட்டியே கொண்டு வந்து அமல்படுத்தியது புடின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Balasubramanian
ஜன 30, 2024 16:25

அமெரிக்காவை அடக்குவதற்கு புடின் மாத்ரி ஒரு தலைவர் தேவை


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 07:34

எதிர்த்து போட்டியிட யாருக்குத் துணிவு வரும் ??


Palanisamy T
ஜன 30, 2024 02:53

இவனையெல்லாம் அதிபரென்று அழைப்பதே தப்பு. சர்வாதிகாரி மற்றும் கொடுங்கோலன் என்று அழைப்பதே சாலச் சிறந்தது. இவன் மரியாதைக்குரிய தலைவனில்லை.


Ramesh Sargam
ஜன 29, 2024 23:30

அவர் ஆயுள் காலம் முடியும்வரை அவரேதான் அதிபர் என்று ஒரேயடியாக அறிவித்துவிடுங்களேன்.. எதற்கு தேர்தல் வீண் செலவு?


Venkatesan.v
ஜன 29, 2024 22:56

இன்னொரு இடியமீன் ???? இதுக்கு தேர்தல் எதுக்கு? ????


katharika viyabari
ஜன 29, 2024 21:37

எதுக்கு தேர்தல் நடத்தி வீண் செலவு.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ