உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா-ரஷ்யா நட்புறவு; ரஷ்யாவில் புடினை சந்தித்த ராஜ்நாத் சிங் பெருமிதம்

இந்தியா-ரஷ்யா நட்புறவு; ரஷ்யாவில் புடினை சந்தித்த ராஜ்நாத் சிங் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார். பின்னர் பேசிய அவர், இந்தியா-ரஷ்யா நட்புறவு, உலகின் மிக உயர்ந்த மலையை விட உயரமானது; உலகின் மிக ஆழமான கடலைக் காட்டிலும் ஆழமானது என்றார்.அரசு முறை பயணமாக, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றுள்ளார். அவர், இந்தியா-ரஷ்யா ராணுவ ஒத்துழைப்புக்கான குழுவின் மாநாட்டில் பங்கேற்றார். மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார். இருநாட்டு தலைவர்களும் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.'ரஷ்யா-இந்தியாவுக்கு இடையிலான உறவு மகத்தான ஆற்றலை கொண்டுள்ளது' என இருநாட்டு தலைவர்களும் தெரிவித்தனர். அப்போது, ராஜ்நாத் சிங் பேசியதாவது:இந்தியா-ரஷ்யா நட்புறவு உலகின் மிக உயரமான மலையை விட உயர்ந்தது. உலகின் மிக ஆழமான கடலை விட ஆழமானது. இந்தியா தனது ரஷ்யா நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். எதிர்காலத்திலும் அதை தொடருவோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
டிச 11, 2024 09:29

வாழ்க... வளர்க... அதிருஷ்ட காத்து இப்போ புட்டின் பக்கம் வீசுது...


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 09:02

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், 2020ல் விவசாயிகள் போராட்டங்களை ஆதரித்த கலிபோர்னியாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான ஹர்மீத் தில்லானை சிவில் பொறுப்புக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக நியமித்துள்ளார் ..... இந்த நிலைப்பாடு இந்திய அரசாங்கம் "தேசிய அடக்குமுறையில்" டாரஸ் எமரால்டு/ விக்கிமீடியா காமன்ஸ் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய சீக்கிய-அமெரிக்கர்களின் குறைகளைத் தீர்க்கும் முயற்சியில் ஹர்மீத் தில்லானுக்கு நேரடி அதிகாரத்தை வழங்கும் ..... வட அமெரிக்காவில் பன்னூன் உட்பட சீக்கியர்களை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியாவை கண்காணிக்கவும் உதவும் ..... ஹிந்துஸ்தான் டைம்ஸ் ...


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 09:44

இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் உரைக்கும் கல்லுல வர்றதில்லை .... அதே சமயம் துக்ளக் மன்னர் குடும்ப ந்யூச்சு ஒண்ணு பாக்கியில்லாம வருது .....


Sampath Kumar
டிச 11, 2024 08:59

இதுக்கு ஜிப் காரனுக நேரு அவர்களுக்கு தான் நன்றி சொல்லணும் ஏதற்கு ஏடுதால் அவரை குறை சொல்லும் கும்பலுக்கு புரியாது


ghee
டிச 11, 2024 10:03

கோவம் வர்ற மாதிரி joke சொல்றாரு சம்பது


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 08:58

மேலும் உறவு வலுப்படவேண்டியது அவசியம் .......


sundarsvpr
டிச 11, 2024 08:46

வெளி நாட்டு கொள்கை இரு நாடுகளுக்கு இடையே உள்ளநம்பிக்கை. இதனால் மூன்றாவது நாட்டின் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. ரஷ்யா அமெரிக்கா இடையில் உள்ள பகைமை உலக ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு நாடுகளின் நட்பு இல்லமால் ஒவ்வொரு நாடும் தன பலத்தை வளர்ச்சியை பெருகிக்கொள்ளவேண்டும். மனம் இருந்தால் வாழ்வு உண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை