உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பீஜிங்கில் ராமாயண நடன நாடகம்: அரங்கேற்றிய சீன கலைஞர்கள்

பீஜிங்கில் ராமாயண நடன நாடகம்: அரங்கேற்றிய சீன கலைஞர்கள்

பீஜிங்: சீனாவில் ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட நடன நாடகத்தை கலைஞர்கள் அரங்கேற்றினர்.பிரபல சீன அறிஞர் மறைந்த பேராசிரியர் ஜி சியான்லின் எழுதிய ராமாயணத்தின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடன நாடகமான “ஆதி காவ்யா-முதல் கவிதை”யை சீன நடனக் கலைஞர்கள் குழு அரங்கேற்றியது.இது குறித்து இந்திய துாதரகம் பதிவிட்டுள்ளதாவது:சீன பரதநாட்டிய நிபுணர் ஜின் ஷான்ஷான் இயக்கிய இந்த நாடகம், 50க்கும் மேற்பட்ட திறமையான உள்ளூர் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண திரண்டு வந்த பார்வையாளர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.இந்த நடன நாடகம் இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்று நிகழ்ச்சி முதன் முதலில் கடந்த ஜனவரி-2025 ல் ஷூனி கிராண்ட் தியேட்டரில் நடைபெற்றது.இவ்வாறு இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கல்யாணராமன் மறைமலை நகர்
நவ 03, 2025 07:28

அய்யகோ! இரும்புத்திரை நாடு சீனாவிலும் நுழைந்து விட்டனர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கதறல். சீன அரசைக் கண்டித்து போராட கம்யூனிஸ்ட்கள் சீனா புறப்படுகின்றனர்.


RAMESH KUMAR R V
நவ 02, 2025 21:07

எத்திசையும் பரவட்டும் நம்முடைய இதிகாசங்களின் மகத்துவம். ஜெய் ஸ்ரீ ராம்.


T.Senthilsigamani
நவ 02, 2025 20:48

பீஜிங்கில் ராமாயண நடன நாடகம்: அரங்கேற்றிய சீன கலைஞர்கள் - மிக மிக நல்ல செய்தி தான் .ஆனால் இதனை தமிழக வலது மற்றும் இடது சாரி கம்யூனிஸ்ட்கள் ஆதரிப்பார்களா ? சந்தேகம் தான் .ஏனென்றால் ராமாயணமும் ,மகாபாரதமும் பொய்மைகள் என்பது தான் கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு .ஏனென்றால் மற்ற மதநூல்களுக்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளதாகவும் ,இந்திய இதிகாசங்களுக்கு அப்படியேதும் இல்லை என்பதால் அது ஒரு கட்டுக்கதை /கற்பனைக்கதை /புனைவுக்கதை என்பதுதான் கம்யூனிஸ்ட்களின் நீண்ட கால நிலைப்பாடு . ஆதலால் தான் ஹிந்து மத கலாச்சாரங்கள் /ஹிந்து மத பண்பாடுகள் /ஹிந்து மத மரபுகள் /ஹிந்து மத வழிபாட்டு ஆகமங்கள் குறித்து எந்த ஒரு நம்பிக்கைகளும் கம்யூனிஸ்ட்களுக்கு கிடையாது .இது தான் உண்மை .இது தான் நிதர்சனம் .இந்தியாவின் சாபக்கேடு சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட்கள் .


Ramesh Sargam
நவ 02, 2025 21:52

விட்டுத்தள்ளுங்கள் திக, திமுக வை. ஜெய் ஸ்ரீ ராம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை