உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 38 நாய்களை ஒரே நேரத்தில் வாக்கிங் அழைத்து சென்று சாதனை

38 நாய்களை ஒரே நேரத்தில் வாக்கிங் அழைத்து சென்று சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டொரன்டோ: கனடாவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மிட்செல் ரூடி என்பவர், ஒரே சமயத்தில், 38 நாய்களை, சுமார் ஒரு கிலோமீட்டர் துாரம் வரை வாக்கிங் அழைத்து சென்று, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும், இவரின் வீடியோவை பார்த்து, 'இது அல்லவோ சாதனை' என பலரும் புகழ்ந்துள்ளனர்.கனடாவை சேர்ந்த 'போங்க்' (BONK) மற்றும் 'கொரிய கே9 மீட்பு அமைப்பு' (KK9R) இணைந்து, இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், மீட்கப்படும் பப்பிகளை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையிலும், கடந்த செப். 5 ம் தேதி, தென்கொரியாவில் உள்ள கோசன் நகரில், கின்னஸ் சாதனை நிகழ்வை நடத்தியது.இதில், கனடாவை சேர்ந்த மிட்செல் ரூடி என்பவர், ஒரே சமயத்தில், 38 தெருநாய்களை, கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் துாரம் வரை, வாக்கிங் அழைத்து சென்றுள்ளார். இதற்கு முன்பு, 36 நாய்களுடன் வாக்கிங் சென்றதே சாதனையாக இருந்தது. இதை முறியடித்த பெருமைக்கு சொந்தக்காரரான மிட்செல் ரூடி, தன்னுடன் வாக்கிங் வந்த நாய்கள் அனைத்தும், நல்ல உடல் திறன் கொண்டவை என்கிறார். இந்நாய்களை பொதுமக்கள் தத்தெடுக்கலாம் என, கே.கே9.ஆர்., அமைப்பு தெரிவித்துள்ளது.இணையதளத்தில் வைரலாகும் இவரின் சாதனையை பாராட்டும் பலரும், 'இதுவல்லவோ சாதனை', 'இதைவிட அதிக தெருநாய்கள் எங்கள் வீதிகளில் இருக்கின்றன; ஒருமுறை இந்தியா வாருங்கள்' என, பலரும் வித்தியாசமான கமெண்ட்களை அள்ளி தெளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
நவ 03, 2024 22:24

மன்னிக்கவும். தமிழகத்தில் கூட அரசியல் கூட்டங்களுக்கு பல ரெண்டு கால் நாய்களை இலவச சரக்கு கொடுத்து கூட்டி வருகிறார்கள் லட்சக்கணக்கில்.


N Sasikumar Yadhav
நவ 02, 2024 11:08

நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் கோடிகணக்கான ரூபாய் ஒதுக்கியதே திருட்டு திராவிட மாடல் அரசு அதை அப்படியே அவர்களுடைய குடும்பத்திற்கு ஒதுக்கி கொண்டார்களோ என்னவோ தெரியவில்லையே


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 02, 2024 10:37

நாய் மட்டும் அல்ல எந்த மிருகங்களுக்கும் உணவளித்தால் உப்பு சேர்க்காத உணவுகளை மட்டுமே அளிக்க வேண்டும். உப்பு மனிதர்களுக்கு மட்டுமே. மற்ற அனைத்து ஜீவராசிகளும் உப்பு சேர்க்காமல் பச்சை மாமிசம் இலைகள் பழங்கள் இவைகளை மட்டுமே உண்டு பசியாறுகிறது. தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் போது சமைத்த உணவுகளை அளிக்க கூடாது. உப்பு சேர்க்காமல் வடித்த அரிசி சாதத்தில் பால் அல்லது தயிர் கலந்து கொடுத்தால் போதுமானது. தமிழகத்தில் சில பகுதிகளில் அரிசி குக்கரில் வைக்கும் போது உப்பு சேர்த்து வைத்து சாதம் தயார் செய்கிறார்கள். அதுவே தவறான பழக்கம். ஆகவே தெரு நாய்களுக்கு நாம் சாப்பிட்ட மிச்சமாகும் உணவுகளை கொடுக்க கூடாது. வெறும் அரிசி சாதத்தில் பால் அல்லது தயிர் சிறிதளவு சேர்த்து கொடுத்தால் போதுமானது. அதனுடைய இனப்பெருக்கம் குறைந்து போகும் நாய்களுக்கு மனநிலை பாதிப்பும் தடுக்கப்படும். இன்னமும் சில இடங்களில் குழந்தைகளை மலஜலம் கழிக்க வெளியே கழிவு நீர் கால்வாய் ஓரம் உட்கார வைக்கிறார்கள். இது தவறு பசியினால் வாடும் நாய்கள் பசியார அதனை உண்பதால் நாய்களின் மனநிலை பாதிப்பு உள்ளாகின்றன. பெண்கள் உபயோகித்த சேனிடரி நாப்கின்களை பொது இடத்தில் குப்பை தொட்டியில் போடாதீர்கள். நாய்கள் அவற்றின் வாசனை முகர்ந்து சாப்பிட முற்படுவதாலும் நாய்கள் மனநிலை பாதிப்பு உள்ளாகி வெறி பிடிக்கின்றன. ரேபீஸ் நோய் பரவி மனிதனை தாக்குகிறது.


Svs Yaadum oore
நவ 02, 2024 06:55

இதைவிட அதிக தெருநாய்கள் எங்கள் வீதிகளில் இருக்கின்றன , ஒருமுறை இந்தியா வாருங்கள் என்று இவருக்கு அழைப்பாம் ...விடியல் ஆட்சியில் சென்னையில் தெரு நாய் பெருக்கம் அதிகம் உள்ளது ....இது பெரும் ஆபத்து ..நாய்கள் குழந்தைகளை கடித்தால் பிறகு தெரு நாய்களை அடித்து உதைத்து துன்புறுத்தல் ...நாய்களை அடித்து உதைத்தால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடுமா ??....நாய்களுக்கு குழந்தைகளை கடிக்கிறோம் என்று புரியுமா ??......நாய்கள் தடுப்பூசி மருந்து மட்டும் இந்தியாவில் 3000 கோடிகள் கொள்முதல் ...இதில் லஞ்ச ஊழல் கொள்ளை ... மாநகராட்சி , நகராட்சி என்று தமிழகம் முழுக்க நாய்கள் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தாமல் பெருகியுள்ளது .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை