உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா உடனான உறவு சுதந்திரமானது: பாக்.,கிற்கு ஆப்கன் பதிலடி

இந்தியா உடனான உறவு சுதந்திரமானது: பாக்.,கிற்கு ஆப்கன் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: இரு நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு இந்தியாவை தொடர்புபடுத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ள ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். ஒரு சில நாட்கள் நடந்த மோதல், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால் ஆப்கன் - பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்பட தாக்குதல் நிறுத்திவைக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ech8jlte&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், '' இந்தியாவின் மடியில் அமர்ந்து கொண்டு ஆப்கானிஸ்தான், எங்களுக்கு எதிராக செயல்படுகிறது,'' எனக்குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் தனது சொந்த தோல்விகளை மற்ற நாடுகள் மீது சுமத்துவதாகவும், ஆப்கானிஸ்தான் இறையாண்மை மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் மவ்லாவி முகமது யாகூப் முஜாகித் கூறுகையில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. எங்களின் பிராந்தியத்தை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதை எங்கள் கொள்கை ஆதரிக்காது. ஆப்கன், சுதந்திரமான நாடு என்ற முறையில் இந்தியாஉடன் உறவை பராமரிக்கிறோம். எங்கள்நாட்டின் நலன் அடிப்படையில் உறவை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

veeramani
அக் 30, 2025 10:10

ஆபிகானிஸ்தான் இந்தியாவின் செல்லப்பிள்ளை. ஆப்கண் மக்கல் இந்தியர்களின் நெருங்கிய நண்பர்கள். அவர்களின் மதத்திற்கு ஏற்றாற்போல் அவர்கள் வசிக்கிறார்கள். இதில் இந்தியர்களுக்கு சந்தோசம்தான் ஆனால் பாகிஸ்தான், தீவிரவாதிகளின் சொர்கம் ஐ எஸ் ஐ போன்ற தீவிரவாதிகளின் பணப்பை வைத்துள்ள நாடு தீவிரவாதம் பற்ரி பேசக்கூடாது. வேண்டுமானால் ஆப்கானிஸ்தான் மேல் காய் வித்து பார்க்கட்டும் இந்திய காய் சப்பிகொண்டு இருக்காது உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்ற நாடு இனிமேல் இருக்காது


veeramani
அக் 29, 2025 09:37

பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு தீவிரவாதிகளின் சொர்கம் பாகிஸ்தான் பாகிஸ்தானின் நம்பகத்தனமாய் பெரிய ஸிரோ. எவரும் நம்பமாட்டார்கள் ஆனால் ஆப்கான் இந்தியரின் உறவுகள் தொன்மையானவை நுணுக்கமானவை


Sun
அக் 22, 2025 17:05

கிரிக்கெட்டில் கடைக் கோடியில் இருந்த ஆப்கானிஸ்தானுக்கு பயிற்சி கொடுத்த இந்தியா இன்று பாகிஸ்தானை ஆப்கன் அணியினர் தோற்கடிக்கும் அளவுக்கு அவர்களை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஏற்கெனவே போர் கலையில் வல்லவர்களான ஆப்கானியர்களை போர் டெக்னிக், நவீன ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தானியர்களை ஓட வைக்க இந்தியாவால் முடியாதா என்ன?


cpv s
அக் 22, 2025 12:39

india must thing before helping to other muslim country towice, india helped turkey during earthquick , then turkey send weabon to pakistan to fight india, then why want help muslim nation like this our people tax money going to wastle or kill our people


Anand
அக் 22, 2025 11:57

நீங்கள் கூறுவது சரியாக புரியவில்லை


cpv s
அக் 22, 2025 11:32

pakistan never get silent unless otherwise pakistan must be divided into four country


அப்பாவி
அக் 22, 2025 09:30

இவிங்க மூர்க்கம் வேறே. அவிங்க மூர்க்கம் வேறே.


S.V.Srinivasan
அக் 22, 2025 09:30

பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே நடந்த போர் சவுதி அரேபியா நாடுகளின் தலையீட்டால் முடிவுக்கு வந்ததுன்னு செய்தி போட்டுருக்கீங்க. டிரம்ப் கோவிச்சுக்கப்போறாரு. அவரு ஏற்கனவே நோபல் பரிசு வாங்க தலைகீழா நின்னுக்கிட்டு இருக்காரு.


நிக்கோல்தாம்சன்
அக் 22, 2025 08:59

எவ்வளவு தெளிவா பேசுறாங்க ஆப்கான், இதுநாள் வரை பாகிஸ்தான் மற்றைய நாடுகளின் பொதுமக்கள் மீது தான் தாக்குதல் நடத்தி கொலை செய்து வருகிறது , குஜராத்தி சம்பவம், மும்பை சம்பவம் , பெஹல்கம் சம்பவம் , காஸ்மீர், பலோச் சம்பவம் இன்று ஆப்கன் என்று எல்லாவற்றிலும் பொதுமக்களே கொல்லப் படுகிறார்கள், தமிழக வெளிநாட்டு மத ஆர்வலர்களே நீங்க உங்களின் தாய்நாடான பாகிஸ்தானிடம் சொல்லுங்களேன், இதுநாள் வரை ஆப்கன் தாக்கியது ஒரு பொதுமக்களும் அடிபடவில்லை, இந்திய தாக்கியதில் அவ்வாறு ஆகவில்லை


Sun
அக் 22, 2025 08:17

பாகிஸ்தான் பங்களாதேஷை தன் பக்கம் வளைத்து இந்தியாவை தாக்க முயன்றது! ஆனால் முந்திக் கொண்ட இந்தியா ஆப்கானிஸ்தானை தன் பக்கம் வளைத்து பாகிஸ்தானை ஆப்கன் மூலம் தாக்கி பாகிஸ்தானுக்கு பயத்தை உண்டாக்கி விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை