உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒவ்வொரு வாரமும் 36 மணி நேரம் விரதம் இருக்கும் ரிஷி சுனக்: காரணம் என்ன?

ஒவ்வொரு வாரமும் 36 மணி நேரம் விரதம் இருக்கும் ரிஷி சுனக்: காரணம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஒவ்வொரு வாரத்தின் துவக்கத்திலும் 36 மணி நேரம் விரதம் மேற்கொண்டு வருகிறார்.ஞாயிறு மாலை 5:00 மணி முதல் செவ்வாய் மாலை 5:00 மணி வரை, தண்ணீர், தேநீர் மற்றும் பிளாக் காபி தவிர வேறு எதையும் அவர் சாப்பிடுவது கிடையாது. இதற்கு அவர், ‛‛ சமச்சீரான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக நான் கடைபிடிக்கும் ஒரு முக்கியமான வழக்கம்'' என விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக ரிஷி சுனக் மேலும் கூறியதாவது: சீரான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாரத்தின் துவக்கத்திலும் விரதம் இருக்க நான் முயற்சி செய்கிறேன். ஆனால், எல்லோரும் இதனை வேறு மாதிரியாக செய்வார்கள். எனக்கு இனிப்பு மிகவும் பிடித்தமானது. இதன் மூலம் விரதம் இருந்த நாட்களைத் தவிர பிற நாட்களில் எனக்கு விருப்பம் போல் சாப்பிட முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.ரிஷி சுனக்கிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் விரதம் இருப்பது உண்மைதான். அவர் திங்கட்கிழமைகளில் எதையும் சாப்பிடுவதில்லை. அவரது வாழ்க்கை மற்றும் வேலையின் அனைத்து அம்சங்களிலும் அவர் காட்டும் ஒழுக்கம், கவனம், உறுதிப்பாட்டிற்கு இது ஒரு உண்மையான சான்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, மெக்சிகன் கோக் தனக்கு பிடித்தமான பானம் எனக்கூறிய ரிஷி சுனக் அதற்கான விளக்கத்தையும் அளித்து இருந்தார். அதில், நான் சர்க்கரை பொருட்களை விரும்புகிறேன். நிறைய இனிப்பு சார்ந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை விரும்பி சாப்பிடுவேன். எனது உணவை நான் விரும்புகிறேன். வேலையின் காரணமாக முன்பு போல் உடற்பயிற்சி செய்வதில்லை. எனவே, வாரத்தின் துவக்கத்தின் என்னை சீரமைத்து கொள்கிறேன் எனக்கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
பிப் 01, 2024 00:32

நாட்டை கொள்ளையடிக்கும் திமுக, காங்கிரஸ் போன்றவர்களிடம் இதுபோன்ற ஒரு ஒழுங்கு முறையை நாம் எதிர்பார்க்க கூடாது.


அப்புசாமி
ஜன 31, 2024 23:01

நானும் தான். ராத்திரி 8 மணியிலிர்ய்ந்து மறுநாள் 8 மணி வரை ஒண்ணும் சாப்பிடுவதில்லை. வாரத்துக்கு 84 மணி நேரம் உண்ணாவிரதம்.


Bellie Nanja Gowder
பிப் 01, 2024 08:58

ஒன்றுக்கும் உதவாத வயிற்றெரிச்சல் பார்ட்டி அப்புவின் கையாலாகாத பதிவு.


Kannan
ஜன 31, 2024 21:17

பொருளாதார பிரச்சனையால் இப்படி பிரச்சாரம் , இந்தியா உட்பட உலகை சுரண்டிய பாவம் உக்ரைன் போர் வடிவில் இந்த நாட்டிடை அழிக்கும்


Priyan Vadanad
ஜன 31, 2024 20:39

இது விரதம் அல்ல. விரதம் என்பது கடவுள் உணர்வுடன் சம்பந்தப்பட்டது.


Rajagopal
பிப் 01, 2024 00:21

நிச்சயம் இல்லை. விரதம் யார் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். உணவு அருந்தாமல், புலால் உண்ணாமல், சில கட்டுப்பாடுகளை மீறாமல் விரதம் இருந்தால், உடம்பில் இருக்கும் அதிகப்படியான, வேண்டாத கொழுப்பு கரையும். மனம் வலிமையாகும். ஒழுக்கம் வரும். புத்துணர்ச்சி வரும். மனம் வேண்டாததையெல்லாம் நினைக்காது. இதை எல்லோரும் செய்தால் நல்லது. நான் தினமும் மாலை ஆறு மணிக்குப்பின் எதையும் சாப்பிடுவதில்லை. காலையில் பத்து மணிக்கு ஒரு பால் கலக்காத தேநீரும், ஊற வைத்த நிலக்கடலை, பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை போன்றவற்றை எடுத்துக்கொள்கிறேன். மதியம் பன்னிரண்டு மணிக்கு சாப்பாடு சாப்பிடுகிறேன். மூன்று மணியளவில் காபி அல்லது தேனீர் குடிக்கிறேன். ஒவ்வொரு மாதமும், முதல் வியாழக்கிழமை இருபத்து நான்கு மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடுவதில்லை. தண்ணீர், பச்சை தேனீர் போன்றவற்றை அருந்துகிறேன். பல வருடங்களாக இதை செய்து வருகிறேன். கண்ட கண்ட உணவு பதார்த்தங்கள், இனிப்புகள் போன்றவற்றை மனம் வேண்டுவதேயில்லை. சனி, ஞாயிறு, விடுமுறை போன்ற நாட்களில், அளவோடு இவற்றை சாப்பிடுவேன். கோக், பெப்சி போன்றவற்றைத் தொட்டு இருபது வருடங்களுக்கும் மேலாகி விட்டது. பியர், மது வகைகளை அருந்துவதில்லை. புகை பிடிப்பதில்லை. இவை அனைத்தையும் நான் கல்லூரியில் படித்தபோது யோசிக்காமல் உண்டதுண்டு. இவை மனதை நோயாளியாகும் ஆற்றல் கொண்டவை. மனம் நோய்ப்பட்டால், உடலை போட்டு அடிக்கும். இதற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.


Balasubramanian
ஜன 31, 2024 20:23

சமச்சீர் உணவு? ????


ஆரூர் ரங்
ஜன 31, 2024 20:20

உயர் சர்க்கரை அளவை விட பட்டினியால் ஏறி இறங்கும் சர்க்கரை அளவு ஆபத்தானது என மருத்துவம் தொடர்புள்ள நூல்களில் படித்திருக்கிறேன். ஒவ்வொரு வேளை உணவிலுமே கட்டுப்பாட்டைக் கடைபிடித்தலே நல்லது.


Bye Pass
ஜன 31, 2024 19:36

40 வயசு தாண்டினால் உயிர் மேல் ஆசை வரும் ..


வாழ்க சனாதன இந்து தர்மம்
ஜன 31, 2024 18:59

சனாதன இந்து தர்ம வளர்ப்பு அப்படி!!! .. இன்னொரு மோடி 2.0!


vbs manian
ஜன 31, 2024 18:20

சுகர் பிரச்சினை வராது.


vbs manian
ஜன 31, 2024 17:55

அருமை.அவசியம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ