உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கொசுவைப் பிடித்தால் சன்மானம்: பிலிப்பைன்ஸில் வினோத அறிவிப்பு

கொசுவைப் பிடித்தால் சன்மானம்: பிலிப்பைன்ஸில் வினோத அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் தலைநகரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது. தலைநகர் மத்திய மணிலாவில் வசிக்கும் மக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 'பொதுமக்கள் வீட்டில் அதிக தண்ணீரை தேக்கி வைத்து கொசுவை உற்பத்தி செய்வார்கள். இதனால் தொற்று பாதிப்பு அதிகரிக்குமே தவிர எந்த பலனும் இல்லை' என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.உயிருள்ள கொசுக்கள் புற ஊதா ஒளியைப் பயன்படுத்தி அழிக்கப்பட்டு வருகிறது. 'இதுவரை மொத்தம் 21 பேர் வெகுமதியைப் பெற்றுள்ளனர். 700 கொசுக்களை மக்கள் கொண்டு வந்துள்ளனர்' என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டெங்குவை எதிர்த்துப் போராடுவதில் உள்ளூர் அரசாங்க நிர்வாகிகளின் நல்ல நோக்கங்களைப் பாராட்டுகிறோம்' என்று பிலிப்பைன்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தெருக்களை சுத்தம் செய்தல் மற்றும் டெங்கு பரப்பும் கொசுக்கள் முட்டையிடும் இடங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுப்பது போன்ற தற்போதைய நடவடிக்கைகளை தீவிர படுத்த, இந்த பரிசுத் தொகை வழங்கப்படுவதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்சில் இந்த ஆண்டில் மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகம் என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 20, 2025 20:02

சநாதனத்தை ஒழிக்க புறப்பட்ட கொசுவை தமிழகம் வந்து கொண்டு செல்லுங்கள் ..... புண்ணியமாப் போகும் .....


Laddoo
பிப் 20, 2025 18:18

கொசுவ அழிக்கணும்னு ஒருத்தர் அதுவும் பெரிய்ய்...ய பதவில ஓக்காத்துக்குன்னு பிதற்றி திரிந்து இப்ப அடங்கி கிடக்குரார். அவரை கூப்பிட்டுக்கோங்க


Ramalingam Shanmugam
பிப் 20, 2025 16:47

வீட்டில் கொசு வளர்க்க ஆரம்பித்து விடுவார்கள் மக்கள்


கொசுமணி
பிப் 20, 2025 15:25

இப்படித்தான் பாம்பு புடிச்சுக் கொடுத்தால் சன்மானம் நு இந்தியாவில் சொன்னாங்க. நம்மாளுங்க பாபுகளைப் புடிச்சிக் கொண்டாந்தாங்க. கொஞ்சம் பேர் மாத்தி யோசிச்சு பாம்பு பண்ணையே வெச்சு பாம்பு உற்பத்தியைப் பெருக்கி காசு பாத்தாங்க. அரசு ஸ்கீமையே இழுத்து மூடிருச்சு. பிலிப்பைன்ஸ்காரனுக்கு அந்த அளவுக்கு மூளை இருந்து கொசுப்பண்ணை வெப்பானோ இல்லே இங்கேருந்து கொசு இறக்குமதி பண்ணி துட்டு பாப்பானோ தெரியலியே?


Ramesh Sargam
பிப் 20, 2025 12:41

இப்படி ஒரு அறிவிப்பை தமிழகத்திலும் அறிவித்து, அதிலும் ஊழல் செய்வார்கள் திமுகவினர். கொசு ஒழிந்தாலும், திமுகவினரின் ஊழலை ஒழிக்கவே முடியாது.


Anantharaman Srinivasan
பிப் 20, 2025 11:46

தமிழக அரசில் லஞ்சம் வாங்கும் பேர்வழிகளை பிடித்துக்கொடுத்தால் சன்மானம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்தால் நல்லது. 25% லஞ்ச பேர்வழிகள் சிக்க வாய்ப்பு.


புதிய வீடியோ