உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனில் குடியிருப்புகள் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல்; 13 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் குடியிருப்புகள் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல்; 13 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிவ்: உக்ரைனில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் ஸபோரிஷியா. இந்த நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷ்ய ராணுவம் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது. இதில், 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9if4jwoa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தனது எக்ஸ் தளப்பக்கத்தில், தாக்குதலில் ரத்த காயங்களுடன் மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவினர் சிகிச்சை கொடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் கூறியதாவது: ரஷ்யாவின் மனிதாபிமானமற்ற இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ரஷ்யாவின் இந்த தாக்குதலில் சாதாரண பொதுமக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா இதுக்கு உரிய பதில் சொல்லியே ஆக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பேசும் தமிழன்
ஜன 09, 2025 08:55

ஒரு கோமாளியை... நடிகனை... ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தன் பலனை... உக்ரைன் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.. ரஷ்யா கூட்டமைப்பில் இருந்து பிரிந்த நாடு உக்ரைன்.. ஆனால் நீ ரஷ்யாவின் எதிரி நாட்டுடன் சேர்ந்து கொண்டு.. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் வேலையை பார்த்து கொண்டு இருக்கிறாய்.. காசு.... பணத்துக்காக எதையும்... சொந்த நாட்டு மக்களை பலி கொடுத்த பாவி என்று உலகம் உன்னை தூற்றும் !!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை