உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவில் 38 மாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல்: அதிர்ச்சி தந்த உக்ரைன் ராணுவம்!

ரஷ்யாவில் 38 மாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல்: அதிர்ச்சி தந்த உக்ரைன் ராணுவம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள 38 மாடிகள் கொண்ட கட்டடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். கடந்த சில தினங்களாக ரஷ்ய ராணுவ படைகளுக்கு, உக்ரைன் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. நவீன ராணுவ தளவாடங்களோ, நிதி வசதியோ இல்லாத உக்ரைன் ராணுவத்தை போர் தொடங்கிய சில நாட்களிலேயே பின்னுக்குத் தள்ளி ரஷ்யா முன்னேறியது. உக்ரைன் நாட்டின் சில மாநிலங்களை ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில் தான், தற்போது உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்து கொண்டே வருகிறது.

ட்ரோன் தாக்குதல்

சமீபத்தில், ரஷ்யாவின் குர்ஸ்க் மாநிலத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது உக்ரைன் ராணுவம். ரஷ்ய மக்களின் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியும் உறுதி செய்தார்.இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 26) ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள 38 மாடிகள் கொண்ட கட்டடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

4 பேர் காயம்

அதிவேகத்தில் வந்த ட்ரோன் அடுக்குமாடி கட்டடம் மீது மோதி வெடித்து சிதறியது. அந்த கட்டடங்களில் இருந்து புழுதிகள் கிளம்பியதை கண்டு பகுதிமக்கள் பீதி அடைந்தனர். பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 38 மாடி கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் போல் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக இணையத்தில் விமர்சனங்கள் பரவி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 26, 2024 17:07

ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தடைக்கு உக்ரைன் பாராளுமன்றத்தின் முடிவு குறித்து போப் பிரான்சிஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். தனது வழக்கமான ஞாயிற்றுக்கிழமை உரையில், "எந்தவொரு கிறிஸ்தவ தேவாலயமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒழிக்கப்படக்கூடாது" என்று போப் வலியுறுத்தினார். தேவாயலங்கள் பாதுகாக்கப்படவேண்டும் ன்னு சொல்லுற அதே போப்பு போர் நிறுத்தம் வேணும் ன்னு ஏனுங்கோ சொல்லல ????


M Ramachandran
ஆக 26, 2024 16:52

ஜொளநசுக்கி டிருந்த மாட்டான் அவன் விரும்பினாலும் அமெரிக்கன் விட மாட்டான். அமெரிக்கன் குளிர் காய்வதில் கில்லாடி.நிறைய ஊராணை ஆயுத வியாபாரத்தால் கொள்ளையடித்து பணம் பார்ப்பவன். ஊரல் எடுத்த கை. சொறிஞ்சிகிட்டு தான் இருப்பான்.


djivagane
ஆக 26, 2024 13:14

இஸ்ரேல் பாலஸ்தீனில் செய்வேதேய் போல் ரஷியாவும் செய்யவேண்டும் உக்ரைனில்


ஆரூர் ரங்
ஆக 26, 2024 14:32

ரஷ்யா என்னவோ அஹிம்சாவாதி போல பேசறீங்க. நேரு இந்திராவை வைத்து நம்மை கொள்ளையடித்த நாடு. கம்யூனிஸ்டுகளை ஊக்குவித்து நக்சல் பிரச்சினை ஏற்படக் காரணமாக இருந்த மட்டமான நாடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை