உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி

போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.இரு நாட்டு ராணுவத்தினரும் உக்கிரமாக போர் புரிந்து வரும் சூழலில், உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முதன்முறையாக துருக்கியில், கடந்த வாரம் நேரடி பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேர பேச்சின் முடிவில், இரு நாட்டு போர்க்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் முதல் இரு தரப்பிலும் போர்க்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த சூழலில், ரஷ்யாவின் மாஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் உக்ரைன் ராணுவம் ஏவுகணைகள் வாயிலாக தாக்குதல் நடத்தியது. இதனால் கைதிகள் பரிமாற்றம் தொடருமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நகரங்கள் முழுவதும் 367 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.இந்த சரமாரியான தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். ரஷ்யா ஏவிய 266 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை உக்ரைன் விமானப் படை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
மே 26, 2025 08:38

போய்ச்சேர்ந்திருக்க வேண்டிய புட்டின் உயிர் தப்பினார். அதற்கு பழி வாங்கதான் இந்த தாக்குதல்.


Nada Rajan
மே 25, 2025 17:28

ரஷ்ய படையினர் திருந்த வேண்டும்.உக்ரைன் மக்கள் ஐயோ பாவம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை