உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 7 போர்களை நிறுத்திவிட்டேன்; இது மட்டும் முடியவில்லை: டிரம்ப்

7 போர்களை நிறுத்திவிட்டேன்; இது மட்டும் முடியவில்லை: டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உலகில் 7 போர்களை நிறுத்திய எனக்கு, ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். ரஷ்யா, உக்ரைன் போர் இன்னமும் ஓயவில்லை. இருநாடுகள் இடையே போர் நிறுத்தத்தை எப்படியும் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஆனாலும் இரு நாடுகள் இடையே தீர்வு எட்டப்படவில்லை.இந் நிலையில், உலகில் 7 போர்களை நிறுத்திய எனக்கு, ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது;புடினும், ஜெலன்ஸ்கியும் இணைந்து செயல்படுவார்களா என்று நாங்கள் பார்த்து வருகிறோம். வெளிப்படையாக காரணங்களுக்காக அவர்கள் நன்றாக பழகுவது இல்லை. இருவருடனும் நானும் இருக்க வேண்டுமா இல்லையா என்பது பின்னர் பார்ப்போம். இருவரும்(புடின்-ஜெலன்ஸ்கி) சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து சண்டையிடுகிறார்கள். மக்களை கொல்கின்றனர். இது மிகவும் முட்டாள்தனமானது. நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன். இதையும் (ரஷ்யா-உக்ரைன் போர்) நிறுத்த விரும்புகிறேன். ஆனால் அது மிகவும் கடினமானதாக மாறி வருகிறது.இவ்வாறு டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

ManiMurugan Murugan
ஆக 24, 2025 00:14

ஏழுப் போர்கள் என்று எந்தெந்த நாட்டிற்கு நடந்த தை நிறுத்தியதாக கூறுகிறார் இப்போது வரை இஸ்ரேல் ஹமாஸ் உள்ளது


Santhakumar Srinivasalu
ஆக 23, 2025 20:33

இவர் அமெரிக்காவை விட்டு மொத்தமாக போனால் தான் அமெரிக்காவுக்கு நிறந்தர விரிவு காலம்.!


raja
ஆக 23, 2025 19:56

டிரம்புக்கு நோபல் ஆசை வந்தது ரொம்ப நல்ல விசயம். போர்களை நிறுத்த டிரம்ப் முயற்சிக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு ஜோக்கர்தான் ஆனால் காரியக்கார ஜோக்கர்.


ஆரூர் ரங்
ஆக 23, 2025 16:40

சிரிக்காம ஜோக் அடிக்கிறார். சூப்பரா இருக்கு.


Sridhar
ஆக 23, 2025 14:35

அவுரு சரியாத்தாங்க சொல்றாரு. இந்தியா பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க அணு ஆயுதங்களை தாக்கியபோது, பாகிஸ்தான் டிரம்ப் கிட்ட என்ன செய்யலாம், உங்களோட அணு ஏவுகணைகளை எய்யலாமான்னு கேட்டபோது, அய்யய்யோ அப்படியெல்லாம் செஞ்சு நாங்க ரகசியமா வச்சிருக்கற அணு ஆயுதங்களை எல்லோருக்கும் தெரியும்படி செய்ய பாக்குறீங்களா, பேசாம இந்தியாவுடன் சமாதானமா போகுற வழியப்பாருங்கனு சொல்லி அவுங்களை இந்தியாவிடம் சரணடைய சொன்னதே அவுருதாங்க அவுரு மட்டும் இல்லேன்னா பாகிஸ்தான்காரனுங்க என்னதான் அடிவாங்கினாலும் மேற்கொண்டு சண்டையை தொடர்ந்து போட்டுக்கொண்டே இருந்திருப்பாங்க. அதுனால, அவரை யாரும் ஜோக்கர் மாதிரி பாக்காதீங்க.


Sun
ஆக 23, 2025 14:34

ஆமாம் நீ தான் தைரியமான ஆளாச்சே? எங்கே இஸ்ரேல் காசா போரை நிறுத்து பார்க்கலாம்?


சின்னப்பா
ஆக 23, 2025 14:31

அமெரிக்காவின் திருமா?


venkatarengan.
ஆக 23, 2025 14:21

இந்தியா செய்த புண்ணியம் ராகுல் எதிர்கட்சி தலைவராக உள்ளார். டிரம்ப் எதிர்கட்சி தலைவராக இல்லை.


Ramesh Sargam
ஆக 23, 2025 14:16

சரி, அடுத்து எங்கள் நாட்டில் காலம் காலமாக நடக்கும் மாமியார்- மருமகள் போரை நிறுத்த உங்களால் முடியுமா?


Easwar Moorthy
ஆக 23, 2025 13:43

அந்த 7 போர்கள் எதுன்னு சொல்லவும்


Yaro Oruvan
ஆக 23, 2025 14:14

எங்க கிராமத்து தெருவுல முனிம்மாவும் சவுந்தலாவும் குழாயடி சண்டையை நிப்பாட்டுனது நம்ம டொனால்ட் எசமான்.. அப்புறம் துபாய்ல ரஹீமும் இக்பாலும் பார்க்கிங் சண்டைய நிறுத்துனதுல டொனால்ட் பங்கு அதிகம்னு அவுகளே சொன்னாவ.. இந்தமாதிரி பல சண்டையை நிறுத்தின டொனால்டுனுக்கு ஒரு நோபல் தோசை பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்


சமீபத்திய செய்தி