உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா தாக்குதல்: பென்சன் வாங்க காத்திருந்த உக்ரைன் நாட்டினர் 21 பேர் பலி

ரஷ்யா தாக்குதல்: பென்சன் வாங்க காத்திருந்த உக்ரைன் நாட்டினர் 21 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: கிளிட் வெடிகுண்டுகளை வீசி ரஷ்யா நடத்திய தாக்குதலில் பென்சன் வாங்க காத்திருந்த 21 முதியவர்கள் உயிரிழந்தனர். 21க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன. அதிபர் டிரம்ப்புடன், ரஷ்ய அதிபர் புடின் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் பிறகு உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகளவிலான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.இதனால், அந்நாடு மீது கூடுதலாக தடை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார். இந்நிலையில், உக்ரைனின் டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள யரோவா என்ற கிராமத்தில் கிளிட் வெடிகுண்டுகளை ரஷ்யா வீசி தாக்குதல் நடத்தியது. இந்த வகை குண்டுகளின் சிலவற்றின் எடை 1,360 கிலோ வரை இருக்கும். போர் துவங்கிய 2022ம் ஆண்டுக்கு பிறகு ரஷ்யா முதலில் பயன்படுத்திய வெடிகுண்டை விட இது 6 மடங்கு பெரியது ஆகும்.இந்த தாக்குதலில் பென்சன் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டு இருந்த 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால் கோபமடைந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகம் இன்னும் அமைதியாக, செயலற்று இருக்கக்கூடாது. அமெரிக்கா பதிலளிக்க வேண்டும். ஐரோப்பாவிடம் இருந்தும் ஜி20 அமைப்பிடம் இருந்தும் பதில் தேவை. இறப்புகளை நிறுத்த ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தாக்குதல் நடத்தப்பட்ட டோனெட்ஸ்க் பகுதியை முதலில் ரஷ்யா கைப்பற்றியது. பிறகு உக்ரைன் படைகள் கடுமையாக போராடி அந்நகரை மீண்டும் கைப்பற்றின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
செப் 09, 2025 21:39

கேலன்ஸயிக்கு மிக மகிழ்ச்சியை அவ்வளவு அரசு பணம்மிச்சமாக்க படுகிறது.


Kumar S
செப் 09, 2025 20:32

It is beneficial for Ukrain’s finance ministry and department of expenditure.


MARUTHU PANDIAR
செப் 09, 2025 20:14

இன்று உலகின் எந்த பகுதியில் இது போல் ரத்தக்களரி நடந்தாலும் அதில் சி ஐ ஏ வின் கை தான் பின் புலத்தில் இருக்கும் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் . தற்போது இந்தியா மீது குறி.


MARUTHU PANDIAR
செப் 09, 2025 19:51

நம்மூரில் நீட்டை ஒரு போதும் விலக்க முடியாது ஏற்று தெரிந்தும் , இவர்கள் சொல்லும் மாநில சுயாட்சிக்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் அதை சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவது போல தான் டிரம்பும் ஏமாத்தி திரியறாப்ல.


MARUTHU PANDIAR
செப் 09, 2025 19:45

உண்மை என்னவென்றால் முதலில் உக்ரைன் மற்றும் அமெரிக்கா ,பிறகு ரஷ்யா இந்த மூவருக்குமே போரை நிறுத்த விருப்பம் இல்லை. பழகியாச்சு. டிரம்ப் வீணாக இதில் இந்தியாவை இழுத்து தனது வயிற்றெரிச்சலை வெளிப் படுத்துகிறார். போர் நிற்காமல் நடந்து கொண்டே இருந்தால் தான் அதை சாக்காக வைத்து அவருக்கு இந்தியாவை சீர்குலைத்துக் கொண்டே இருக்க முடியும்.


அப்பாவி
செப் 09, 2025 19:40

இது போருக்கான நேரமில்லை . போர் நிறுத்தத்தால் யாருக்கும் லாபம் இல்லை.


Prabu
செப் 09, 2025 19:12

இவர்கள் மனித கேடயமாக இருக்க கூடும் . லாலிபாப் சாப்பிடுபவர்கள் மீது குண்டு வீச ரஷ்யா ஒன்றும் குழந்தை அல்ல .


djivagane
செப் 09, 2025 18:47

தற்போது பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்ரேலைப் போலல்லாமல், உக்ரைனில் இனப்படுகொலை மற்றும் பஞ்சத்தை ஏற்படுத்தாததற்கு ரஷ்யாவுக்கு நன்றி


Natarajan Ramanathan
செப் 09, 2025 23:03

இஸ்ரேல் மற்றும் ரஷ்யா இரண்டுமே செய்வது மிகவும் சரியான செயல்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை