உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய அதிபர் தேர்தல்: ஆன்லைன் வாயிலாக ஒட்டளித்தார் புடின்

ரஷ்ய அதிபர் தேர்தல்: ஆன்லைன் வாயிலாக ஒட்டளித்தார் புடின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தல் இன்று துவங்கியது. ஆன்லைன் வாயிலாக ஓட்டளித்தார் அதிபர் விளாடிமிர்பு டின். ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் உள்ளார். இவரது பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று துவங்கிய அதிபர் தேர்தல் வரும் 17-ம் தேதி வரை நடக்கிறது.புதிய அதிபரை தேர்வு செய்ய ரஷ்ய மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். அதே நேரம் பல்வேறு நாடுகளில் வாழும் ரஷ்யர்கள் அந்தந்த தூதரகங்களில் வாக்களித்தனர்.இந்நிலையில் உக்ரைனில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் ஆன்லைன் வாயிலாக நடந்த ஒட்டுப்பதிவு நடந்தது. இதில் அதிபர் மாளிகையான கிரம்ளின் மாளிகையில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ஆன்லைன் வாயிலாக தனது ஒட்டளித்தார் அதிபர் விளாடிமிர் புடின்.இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் போட்டியிடுகிறார். இவரைத் தவிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் நிகோலாய் கரிடோனோவ், தேசியவாத லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் புதிய மக்கள் கட்சியின் விளாடிஸ்லாவ் டாவன்கோவ் ஆகியோரும் களத்தில் உள்ளனர். தேர்தலில் 4 முனை போட்டி இருந்தாலும், புதின் மீண்டும் வெற்றி பெற்று 5-வது முறையாக அதிபராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மார் 15, 2024 23:41

ரஷ்யா வீரர்கள் ஒருவருடத்திற்கும் மேலாக போர்க்களத்தில் சொல்லொணாத்துயரத்தில் உள்ளனர். இவர் ஜாலியாக மாளிகையில் உட்கார்ந்துகொண்டு வோட்டு பதிவு செய்கிறார். போர்முனைக்கு சென்று வீரர்கள் படும் கஷ்டங்களை பார்க்கவேண்டும் அதிபர் என்பவர்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை