அணுசக்தி நீர் மூழ்கி ஏவுகணை சோதனை மிரள வைக்கும் ரஷ்யாவின் அடுத்த முயற்சி மிரள வைக்கும் ரஷ்யாவின் அடுத்த முயற்சி
மாஸ்கோ: நீர் மூழ்கி கப்பலில் இருந்து செலுத்தப்படும், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும், அணுசக்தியில் இயங்கும், 'போஸைடான்' என்ற ஏவுகணை சோதனையை ரஷ்யா நடத்தியுள்ளது. கி ழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கு இடையே கடந்த மூன்றரை ஆண்டு களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இதற்காக ரஷ்யாவுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. வலியுறுத்தல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினுடன் போரை நிறுத்துவது குறித்து நேரடியாக பேச்சு நடத்தினார். இருப்பினும் போர் நிறுத்தத்துக்கான எந்த அறிகுறியும் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் தொடர்ந்து தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த தொலைதுாரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிடம் வலியுறுத்தி வருகிறார். இதையடுத்து எழுந்துள்ள பதற்றத்துக்கு மத்தியில், ரஷ்யா தன்னிடம் உள்ள சக்தி வாய்ந்த ஆயுதங்களை சோதனை செய்து தன் பலத்தை காட்டி வருகிறது-. இந்த வகையில், ரஷ்யா தன்னிடம் உள்ள அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும், அணுசக்தியில் இயங்கும் 'போஸைடான் சூப்பர் டார்பிடோ' ஏவுகணையின் சோதனையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று தெரிவித்து உள்ளார். இந்த ஏவுகணை பரந்த கதிரியக்க கடல் அலைகளை துாண்டுவதன் வாயிலாக எதிரி நாட்டின் கடலோரப் பகுதிகளை அழிக்கும் திறன் வாய்ந்தது என கூறப் படுகிறது. போஸைடான் என்பது அணுசக்தி திறன் வாயிலாக நீருக்கடியில் இயங்கும் ஒரு பெரிய, ஆளில்லா ட்ரோன் ஆகும். இது அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று எதிரிகளின் பாதுகாப்பை கடந்து, கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாகும். சோதனை இது மணிக்கு, 185 கி.மீ., வேகத்தில், 10 ஆயிரம் கி.மீ., துார இலக்கை தாக்கும் திறன் கொண்டது. 60 அடி நீளமும், 6 அடி அகலமும் உள்ள இந்த ஏவுகணை, 100 டன் எடை கொண்டது. கடந்த, 21ம் தேதி, 'புரோவெ ஸ்ட்னிக்' எனப்படும் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும், அணுசக்தியில் இயங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை யை இயக்கி ரஷ்யா சோதனை செய்தது. இதற்கடுத்த நாளான, 22ம் தேதி, தன் அணு ஆயுதங்கள் தயார் நிலை குறித்த ஒத்திகையையும் நடத்தியது. இந்த வரிசையில் இந்த சோதனை நடந்துள்ளது.