உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுவிட்சர்லாந்து பாரில் பயங்கர வெடி விபத்து: பலர் பலி

சுவிட்சர்லாந்து பாரில் பயங்கர வெடி விபத்து: பலர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள பாரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் பிரபலமான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாடி மகிழ, ஏராளமானோர் கூடியிருந்தனர். அதிகாலை 1.30 மணிக்கு திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 2012ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடந்த சியர் ரயில் விபத்தில் 28 பேர் உயிரிழந்த சம்பவத்தை போலவே இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அவசர உதவிக்கு +41 848 112 117 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி