உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எலும்புக்கூடாக காட்சியளிக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதி: ஹமாஸ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

எலும்புக்கூடாக காட்சியளிக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதி: ஹமாஸ் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

ஜெருசலேம்: இஸ்ரேல் பிணைக்கைதி எவியத்தார் டேவிட் காசாவில் தனது சொந்த புதைகுழியை தோண்டிக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர போர் நடக்கிறது. 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. ஒரே நேரத்தில் பல ஆயிரம் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.பிணைக்கைதிகளை மீட்க தான் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போரை துவங்கியது. 250 பிணைக்கைதிகளில் பலர் இறந்து விட்டனர். பலர் மீட்கப்பட்டனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் வசம் இருக்கின்றனர்.அவர்களை மொத்தமாக விடுவித்தால் போரை நிறுத்துவோம் என்கிறது இஸ்ரேல். படிப்படியாக விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஹமாஸ். இதனால் தான் போர் நிறுத்தம் வருவதில் இழுபறி நீடிக்கிறது.இந்நிலையில் இஸ்ரேலை பணிய வைக்க தங்கள் வசம் இருக்கும் பிணைக்கைதி ஒருவரின் அதிர்ச்சி வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.பிணைக்கைதி பெயர் எவ்யதார் டேவிட் வயது 24. இவர் ஜெர்மன் மற்றும் இஸ்ரேல் குடியுரிமை வைத்துள்ளார்.ஹமாஸ் வெளியிட்ட வீடியோவில், சுரங்கப்பாதை ஒன்றில் டேவிட் மண்வெட்டியுடன் இருக்கிறார். தனது புதைகுழியை தானே தோண்டிக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. எலும்பும் தோலுமாக, மெலிந்த உடலுடன் காணப்படும் டேவிட் வீடியோவில் கூறியதாவது:நான் இப்போது என் புதைகுழியை தோண்டுகிறேன். ஒவ்வொரு நாளும், என் உடல் பலவீனமடைந்து வருகிறது. நான் நேரடியாக என் கல்லறைக்கு நடந்து செல்கிறேன். நான் அடக்கம் செய்யப்படப் போகும் கல்லறை இருக்கிறது. விடுதலை பெற்று நான் தூங்குவதற்கு நேரம் நெருங்கி வருகிறது. இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.24 வயதான அந்த இளைஞனின் குடும்பத்தினர் இஸ்ரேல் அரசாங்கத்திடமும், உலக சமூகத்திடமும் டேவிட்டைக் காப்பாற்ற முடிந்த அனைத்தையும் செய்யுமாறு உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் விடுத்தனர். இந்த வீடியோவைக் கண்டித்து, ஹமாஸ், டேவிட்டை வேண்டுமென்றே பட்டினி போட்டுக் கொன்று வருவதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதற்கிடையே, டேவிட் குடும்பத்தினரிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனைத்து பிணைக்கைதிகளையும் திரும்பக் கொண்டு வர தனது அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Siva Rama Krishnanan
ஆக 04, 2025 16:32

காசா மக்களின் பட்டினி சாவு அல்லல்களுக்கு முழு பொறுப்பு ஹமாஸ் இயக்கத்துக்குதான்.


நிக்கோல்தாம்சன்
ஆக 04, 2025 08:09

இந்த உலகத்தினை அழிக்க வந்த மதம் என்றால் அது தீவிரவாதத்தை கொள்கையாக கொண்ட மதம்தான் என்பதனை ஹமாஸ் மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது.


ரங்ஸ்
ஆக 03, 2025 21:11

பிணைக்கைதிகளாக பலர். மீட்க இரண்டரை வருடங்களாக போர்.பல ஆயிரம் பாலஸ்தீனிய மக்கள் மரணம்.இன்னமும் சிலரை சித்ரவதை செய்வது, கொடுமையிலும் கொடுமை.


D Natarajan
ஆக 03, 2025 21:09

காசாவை தரை மட்டமாக்க வேண்டும்.இஸ்ரேலுக்கு எல்லா நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும். கொஞ்சம் கூட கருணை காட்டாமல் அனைத்து ஹமாஸ் தீவிரவாதிகளை இரக்கமின்றி அழிக்க வேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2025 20:35

ஆடு முனியாண்டி விலாஸ் முன்னாடி டப்பா டான்ஸ் ஆடுதுன்னு மட்டும் புரியுது ......


peethulukkan
ஆக 03, 2025 20:29

இதுதான் அமைதி மார்க்கம்!!!


Natarajan Ramanathan
ஆக 03, 2025 20:26

ஹமாஸ் தீவிரவாதிகளை ஒருவர்கூட விடாமல் இஸ்ரேல் அழித்து ஒழிக்கவேண்டும்.


Ramesh Sargam
ஆக 03, 2025 19:54

இப்படி ஒரு பரிதாப நிலை யாருக்கும் வரக்கூடாது... அட எதிரிக்கும் வரக்கூடாது.


A viswanathan
ஆக 03, 2025 20:30

இங்கு அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இதை பார்த்து புத்தி வரட்டும்.


மனிதன்
ஆக 03, 2025 21:50

உங்களுக்குத்தான்ப்பா புத்தி வரணும், என்னவோ ஒரு பிணைக்கைதியை இப்படி கண்டதற்கே அப்பப்பா உங்க மனிதாபிமானம்??? இப்படி துடிக்குதே, அங்கே எத்தனை எத்தனை பிணைக்கைதிகள் இதைவிட மோசமாக மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள்... ப்ப்பா உங்க மனிதாபிமானத்தை நினைத்தால்..........சத்தியமா கேவலத்தின் உச்சமடா நீங்கள்


கண்ணன்,மேலூர்
ஆக 04, 2025 08:02

குண்டு வச்சு அப்பாவி மனுஷங்களை கொல்லும் போது உன் மனிதாபிமானம் எங்க போச்சு மனிதா?


பேசும் தமிழன்
ஆக 04, 2025 09:03

நீங்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு கூஜா தூக்கும் ஆள் என்பது உங்கள் கருத்தின் மூலம் தெரிகிறது..... இதே கரிசனம் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கில் பொது மக்களை கொன்ற போது இல்லாமல் போனது ஏனோ ??


சமீபத்திய செய்தி