உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  ஸ்மார்ட் போன், வாட்ச் பயன்படுத்த சிங்கப்பூர் பள்ளிகளில் கட்டுப்பாடு

 ஸ்மார்ட் போன், வாட்ச் பயன்படுத்த சிங்கப்பூர் பள்ளிகளில் கட்டுப்பாடு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், பள்ளி நேரங்களில், 'ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச்' பயன்படுத்த மாணவர் களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பதால், சிறாருக்கு உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதாக பல்வேறு நாடுகளும் கவலை தெரிவித்து உள்ளன. லாக்கர் அவர்களை பாதுகாக்க, முதல் நாடாக ஆஸ்திரேலியா, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, டென்மார்க், நார்வே, மலேஷியாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் கல்வி அமைச்சகம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் 2026 ஜன., 1 முதல், மே ல்நிலைப் பள்ளிகளில், பள்ளி நேரங்களில், ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இதன்படி, இடைவேளைகளில் அவற்றை பயன்படுத்தக் கூடாது. பள்ளிக்கு வந்ததும், மாணவர்கள் தங்களது ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்சுகளை லாக்கர்களில் வைக்க வேண்டும். வரவேற்பு தேவைப்படும் சமயங்களில் அவற்றை பயன்படுத்த பள்ளி நிர்வாகம் அனுமதிக்கும். மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில், துவக்கப் பள்ளிகளில் இந்த தடை ஏற்கனவே உள்ள நிலையில், தற்போது மேல்நிலைப் பள்ளிகளிலும் நீட்டிக்கப்பட்டதற்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை