உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 103 விமானங்கள் வாங்குகிறது தென் கொரியா

103 விமானங்கள் வாங்குகிறது தென் கொரியா

சியோல்:தென் கொரியாவைச் சேர்ந்த 'கொரியன் ஏர்' விமான நிறுவனம், 103 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை, 'போயிங்' நிறுவனத்துடன் செய்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் கொரியன் ஏர் நிறுவனம், தன் விமானங்களை நவீனமயமாக்கவும், வளர்ச்சியை மேம்படுத்தவும், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் விமான நிறுவனத்துடன் 4.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 103 விமானங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. கொரியன் ஏர் நிறுவனத்தின் வரலாற்றில், ஒரே நேரத்தில் வாங்கப்படும் மிகப்பெரிய ஆர்டர் இதுவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை