உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மக்கள் மீது குண்டுகளை வீசிய தென்கொரிய போர் விமானம்; திடீர் பரபரப்பு!

மக்கள் மீது குண்டுகளை வீசிய தென்கொரிய போர் விமானம்; திடீர் பரபரப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சியோல்: தென் கொரியாவில் குடியிருப்புகள் மீது, போர் விமானம் 8 குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தவறுதலாக நடந்ததாக தென் கொரிய ராணுவம் மன்னிப்பு கோரியது.தென் கொரியாவில் குடியிருப்புகள் மீது, போர் விமானம் 8 குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. குண்டுகள் தாக்கி, பொதுமக்கள் 15 பேர் காயம் அடைந்தனர். போச்சியோனில் வீடுகள் மற்றும் ஒரு தேவாலயம் சேதமடைந்தன. இந்த தாக்குதல் நடந்த பகுதி, தலைநகர் சியோலில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=da4vog80&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த விபத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.போர் பயிற்சியின் போது தவறுதலாக குண்டுகள் வீசப்பட்டதாக தென் கொரிய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. குண்டு வீச்சு சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியதோடு அப்பகுதியில் போர் பயிற்சி முழுவதும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Radhakrishnan Seetharaman
மார் 06, 2025 20:46

பயிற்சியின் போது போர் விமானங்கள் உண்மையான குண்டுகளை சுமந்து செல்லுமா?


Mecca Shivan
மார் 06, 2025 19:16

வட கொரியாவின் ஆதரவுடன் நடந்ததா ?


Kasimani Baskaran
மார் 06, 2025 17:05

கோமாளிகள்..


தத்வமசி
மார் 06, 2025 15:28

இது போன்ற ஒரு நிகழ்வு நமது நாட்டில் நடந்திருந்தால் நமது நாட்டு எதிர்கட்சிகளின் மனநிலை என்னவாக இருக்கும் ?


Visu
மார் 06, 2025 17:58

அதுவும் சிறுபான்மையினரென்றால் கலவரத்தை தூண்டி குளிர்காய்ந்திருப்பார்கள்


முக்கிய வீடியோ