உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபரான பின் முதல் வெளிநாட்டுப்பயணம்; இந்தியா வருகிறார் அனுர திசநாயகே

அதிபரான பின் முதல் வெளிநாட்டுப்பயணம்; இந்தியா வருகிறார் அனுர திசநாயகே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு; இலங்கை அதிபரான பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக அனுரகுமார திசநாயகே இந்தியா வருகிறார். இலங்கையில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அனுர குமார திசநாயகே பெரும் வெற்றி பெற்றார். தொடர்ந்து நடந்த பார்லிமென்ட் தேர்தலிலும் அவரது கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், அனுர குமார திசநாயகே, 2 நாள் அரசு முறை பயணமாக டிச.15ம் தேதி இந்தியா வருகிறார். இது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிசா நிருபர்களிடம் கூறியதாவது; வரும் 15ம் தேதி, அதிபர் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா செல்கிறார். பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இந்த பயணத்தின் போது அதிபருடன், வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், இணையமைச்சர் விஜில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இணைகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
டிச 11, 2024 20:22

இலங்கை அரசுக்கு இந்தியாவின் உதவி தற்சமயத்தில் மிக மிக தேவை. நல்லவேளை சீனா, பாகிஸ்தான் செல்லவில்லை. இதிலிருந்து ஒன்று புரிகிறது, அனுர திசநாயகேவுக்கு கொஞ்சம் தெளிவாக சிந்திக்கும் திறன் இருக்கிறது என்று. வந்தாரை வாழவைக்கும் இந்தியா ...


ஆரூர் ரங்
டிச 11, 2024 12:30

முந்தைய அதிபர்களின் முதல் விசிட் திருப்பதிக்குதான். இவரு? பழனி விஜயம் செய்து தமிழர்களை கவரலாம். பரிசு வாங்க குருமா, கனி வருவர்.


அப்பாவி
டிச 11, 2024 09:31

முந்தைய அதிபர்கள் விளையாடிய அதே டெக்னிக்தான் இப்பவும்.


Prasanna Krishnan R
டிச 11, 2024 09:24

Ask your Srilankan Navy to control their arrogance on innocent fishermen. Otherwise .. Ok polachu po


பாலா
டிச 11, 2024 11:36

They arrest while they cross the border.


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 08:43

பிச்சை போடலாம் ..... ஆனால் பல கண்டிஷன்களுடன் .....


சமீபத்திய செய்தி