உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கச்சத்தீவை மீட்பது முடியாத விஷயம் இலங்கை அமைச்சர் கருத்து

கச்சத்தீவை மீட்பது முடியாத விஷயம் இலங்கை அமைச்சர் கருத்து

கொழும்பு :''இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்போம் என இந்தியாவில் இருந்து அறிக்கைகள் வெளியாவதற்கு எவ்வித அடிப்படைகளும் இல்லை. அங்கு தேர்தல் நேரம் என்பதால் இது போன்ற குரல்கள் எழுவது இயல்பு,'' என, அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.

ஒப்புதல்

லோக்சபா தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மறைந்த இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது, 1974ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாகவும், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் ஒப்புதலுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டி உள்ளார்.இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்போம் என, மத்தியில் ஆளும் பா.ஜ., கூறி வருகிறது. இந்த விவகாரம் குறித்து, இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று கூறியதாவது:இந்தியாவில் தேர்தல் நேரம் என்பதால், கச்சத்தீவு குறித்து இது போன்ற குரல்கள் எழுவது இயல்பு. இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு பகுதிக்குள் நுழையக் கூடாது என்பதற்காகவும், அந்த வளம் நிறைந்த பகுதியில் இலங்கை எந்த உரிமையும் கோரக்கூடாது என்பதற்காகவும், இந்த இடத்தை பாதுகாக்க, இந்தியா தன் நலன்களின் அடிப்படையில் செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன்.

தடையில்லை

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்போம் என்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. கடந்த 1974 ஒப்பந்தப்படி, இரு தரப்பு மீனவர்களும் இரு நாட்டு பகுதிகளில் மீன் பிடிக்க தடையில்லை.பின், 1976ல் இந்த ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்பட்டு திருத்ததப்பட்டது. அதன்படி, இரு தரப்பு மீனவர்களும் தங்கள் கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.இந்த 1976 ஒப்பந்தத்துக்காக, மேற்கு கரை என்ற பகுதியை இந்தியா தங்கள் வசம் எடுத்துக் கொண்டது. இது, கன்னியாகுமரி கடலுக்கு கீழ் உள்ளது. பரந்த கடல் வளத்துடன் கூடிய இந்த பகுதி, கச்சத்தீவை விட 80 மடங்கு பெரியது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஏப் 06, 2024 19:19

பாரதிய ஜனதா இவற்றை தேர்தலில் தான் பேசிக் கொண்டிருக்கின்றது கச்சத்தீவைமீட்க வேண்டும் என்றால் அதற்கான எடுத்த முதல் நடவடிக்கை என்ன பங்களாதேஷ் அரசுக்குபகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறது இந்தியா விட்டுக் கொடுத்திருக்கிறது அவற்றையும் பாரதிய ஜனதா அரசு மீட்குமா சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் எளிதில் மீறப்படுபவை அல்ல அப்படி மீறப்பட்டால் காவிரிக்காக மைசூர் ராஜதானியும் சென்னை ராஜதானியும் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மாற்ற முடியும் முல்லை பெரியார் அணைக்காக சென்னை ராஜதானியும் திருவிதாங்கூர் அரசும் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மீளப் பெற முடியும் ஆகவே இவையெல்லாம் நடக்காது இரு தரப்பும் வெறுமனே தேர்தல் பிரச்சினையாக எழுப்புகின்றன இது இந்தியா மீது இலங்கை மக்களிடையே வெறுப்பை உருவாக்கும்


Devaraju
ஏப் 06, 2024 14:45

One day srilanka will be in India control, it will be happen soon


சிவம்
ஏப் 06, 2024 10:49

நீயா திருப்பி கொடுத்தால், நல்லது. பாகிஸ்தானின் தற்போது நிலைமையை பார்த்து பேசுங்க


குமரி குருவி
ஏப் 06, 2024 07:54

கொடுத்ததை கேட்பது முறையல்ல..ஆனால் கொடுத்ததை வைத்து பயமுறுத்தினால் அழிச்சாட்டியம் பண்ணியத்தால் பிடுங்குவது தவறில்லை..


அப்புசாமி
ஏப் 06, 2024 06:56

கச்சத்தீவு இந்தியாவை விட இலங்கைக்கு அருகில் உள்ளது. 1970 களில் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி இந்தியாவுக்கு பாக் ஜலசந்தியில் அதிக கடல்பரப்பு கிடைத்தது. இலங்கையின் இண்டர்நேஷனல் பார்டருக்கு உட்படிருந்த கச்சத்தீவு அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. 1970 களில் சில ஆயிரங்களாக இருந்த மீனர்வர்கள் இன்று லட்சக்கணக்கில் பெருகி விட்டார்கள். இங்கே இருக்கும்.மீன்களை மடிப்புவலை, சுருக்கு வலைன்னு போட்டு அரிச்சு புடிச்சாச்சு.


hari
ஏப் 06, 2024 07:19

இந்த கதையெல்லாம் உடு கோவாலு... ஆனா யாரு குடுத்தான்னு மட்டும் சொல்லாதே


ஆரூர் ரங்
ஏப் 06, 2024 11:05

அநியாயமாக இலங்கைக்கு தாரைவார்த்த நேரத்தில் அந்த ஆதாரங்களை அளிக்கத் தவறியது கருணாநிதி அரசு.


subramanian
ஏப் 06, 2024 13:10

கட்ச தீவு பாரதத்தின் எல்லைக்குள் உள்ளது


ராமகிருஷ்ணன்
ஏப் 06, 2024 05:50

முடியாததை முடிப்பது தான் மோடி ஸ்டைல். கச்சதீவு மட்டும் அல்ல இலங்கையையும் இந்தியாவுடன் இணைத்து விடுவோம் போதை பொருட்கள் கடத்தல், மீனவர் பிரச்சனை மறையும்.


Bhakt
ஏப் 05, 2024 23:40

கச்சத்தீவு மீட்கப்பட்டும்


Bhakt
ஏப் 05, 2024 23:39

கட்ச தீவு மீட்கப்பட்டும்


Kasimani Baskaran
ஏப் 05, 2024 23:23

காங்கிரஸ் கோமாளிகள் எந்த அடிப்படையில் இராமேஸ்வரம் மீனவர்களின் உரிமையில் கை வைத்தார்கள்? சீனாவில் தாய் மற்றும் மகன், மமோ சிங் முன்னிலையில் கம்முநிஸ்ட் தலைவர்களுடன் தனிப்பட்ட ஒப்பந்தம் போட்டது மட்டுமல்ல சிறிய நாடான இலங்கையிடம் கூட மண்டியிட்டு பிச்சை எடுத்து இருக்கிறார்கள் தமிழர்கள் திராவிடனுக்கும், காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவது தற்கொலைக்குச்சமம்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ