உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கச்சத்தீவுக்கு இலங்கை அதிபர் திடீர் பயணம்

கச்சத்தீவுக்கு இலங்கை அதிபர் திடீர் பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

யாழ்ப்பாணம் : இலங்கை அதிபர் அனுர குமார, இன்று( செப்.,01) மாலை திடீரென கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள மீனவர்களிடம் பேசிய அவர், 'கச்சத்தீவை எந்த காரணம் கொண்டும் விட்டுத்தரப் போவதில்லை' என தெரிவித்தார்.வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதால், மீனவர்களை பாதுகாப்பதற்காக, கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், 'தமிழக மீனவர்கள் 800 பேர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு, கச்சத்தீவை மீட்பதே, நிரந்தரத் தீர்வு,' என கூறினார்.Galleryமேலும், 'கச்சத் தீவை, இந்தியா திரும்பப்பெற வேண்டும் எனவும் அதற்கான, நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து, விஜய் பேச்சுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத், கண்டனம் தெரிவித்தார். மேலும், அவர், 'தமிழகத்தில் தேர்தல் காலங்களில், கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுவது, தமிழக அரசியல்வாதிகளின் வழக்கம்' எனவும் விமர்சித்தார்.இலங்கை அரசியலிலும், சமூக வலைதளங்களிலும் கச்சத்தீவு மீட்பு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார, காலை, இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அங்குள்ள மயிலிட்டி துறைமுகத்தில், வளர்ச்சி பணிகளை துவங்கி வைத்த அவர், யாழ்ப்பாணத்தில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.பின்னர், திடீரென மாலை 5:00 மணிக்கு யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறையில் இருந்து, நான்கு ரோந்து படகுகளுடன், கச்சத்தீவுக்கு சென்றார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, கச்சத்தீவை சுற்றிப் பார்த்தார். அங்குள்ள மீனவ மக்களுடன் கலந்துரையாடிய அனுர குமார, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.மேலும், அவர்களிடம், 'நம் மக்கள் நலனுக்காக, கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்,' என உறுதிபட தெரிவித்தார். பின்னர், கச்சத்தீவின் இயற்கை அழகை ரசித்த அவர், கச்சத்தீவின், எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு, இலங்கை கடற்படையின் ரோந்து படகில் யாழ்ப்பாணம் திரும்பினார். இலங்கை அதிபர் ஒருவர், கச்சத்தீவுக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை.அதிபர் அனுரா குமார கச்சத்தீவு மீனவர்களுடன் பேசும்போது, 'இந்திய மீனவர்கள் விஷயத்தில் அதிரடியாக ஒரு முடிவெடுக்கப் போகிறேன். இனி, இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து, மீன் பிடித்து இலங்கை கடல்படையிடம் சிக்கினால், கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை அவ்வளவு எளிதாக விட மாட்டோம். அவர்களிடம் இருந்து பிடிபடும் படகுகளை, தற்போது வரை மனிதாபிமான அடிப்படையில் திரும்ப ஒப்படைத்து வருகிறோம். இனி அதுபோல் நடக்காது. படகு பிடிபட்டால், அது இலங்கைக்கே சொந்தமாகும்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

V Venkatachalam
செப் 02, 2025 09:59

சும்மா இருந்த சங்கை ஊதியக் கெடுத்தான் ன்னு சொல்லுவாய்ங்க. அது அப்புடியே உண்மையாகச்சு.


அன்பு
செப் 02, 2025 18:05

இலங்கைக் கரை வரை இந்திய மீனவர்கள் சென்று மீன் பிடிக்கப் போனால் அவர்கள் கைது செய்யாமல் வேறு என்ன செய்வார்கள். இந்திய மீனவர்கள் எல்லை கடந்து செல்லாமல் இருப்பதே நல்ல தீர்வு. இதை விட போதைப் பொருட்கள் கடத்தலும் மும்முரமாக நடந்து வருகிறது. அவர்கள் சும்மா இருப்பார்களா?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 02, 2025 00:50

இது தான் விஜய் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்த கதை


Thravisham
செப் 02, 2025 06:34

அங்க விசிலடிச்சான் குஞ்சுகளை தன்னோடு அழைத்து செல்வாரா மிஸ்டர் விஜய் அவர்களே?


Ramesh Sargam
செப் 01, 2025 23:45

அந்த தீவு ஒருவேளை ஒரு பெரிய சுனாமியில் சிக்கி மூழ்கிப்போனால், இந்த அனுர குமார என்னசெய்வார்? தீவு என்ன, இலங்கையே மூழ்கினாலும் ஒன்றும் செய்யமுடியாது. அப்போது இந்தியாவுக்கு வரவேண்டியதுதான் உதவி கேட்டு? ஆனால் அவர் கூறிய அந்த உண்மையை மறுக்கமுடியாது, அதான் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தமிழக அரசியல்வாதிகள் அந்த தீவை பற்றி யோசிப்பார்கள், பேசுவார்கள். இது முற்றிலும் உண்மை.


ManiMurugan Murugan
செப் 01, 2025 23:13

கடலில் காற்றின் வேகத்தை க் கொண்டே படகுகள் செயல்படுத்த வேண்டிய சூழல் வரும் அத்தகைய நேரங்களில் படகுகள் திசை மாறிப் போகும் அது மீனவர்கள் குற்றமில்லை இலங்கை அதிபர் சிறிதுஅனைத்து மீனவர் களின் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் படகுகள் வந்திருக்கும் தூரத்தை கணக்கிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவு இட வேண்டும் கச்சத்தீவு அனைத்து தரப்பினர் வந்து செல்ல சுற்றுலாத்துறை யாக மாற்ற வேண்டும் அங்கு ஒரு கண்காணிப்பு கோபுரம் மற்றும் எச்சரிக்கை கோபுரம் அமைக்க வேண்டும் இரு நாட்டு மீனவர்கள் பயன் பெற திட்டம் வகுப்பதே நன்று தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தலைவா மீனவர்கள் நன்மை க் கருதி கச்சத்தீவு பிரச்சனை கையாள வகை செய்ய வேண்டும் தலைவா நடவடிக்கை எடுங் கள் மேலும் கடல் கொள்ளை யர் பிரச்சனைக்கும் முடிவு காண வேண்டும்


Ganapathy
செப் 01, 2025 23:03

ஒரு புல் கூட முளைக்காது என ஆஹம்பாவமாகக் கூறி நேரு மாமா சீனாவுக்கு கொடுத்த அக்ஸாய் சின், பெஷாவர் மற்றும் லாஹூர் வரை நமது ராணுவம் பிடித்த பாகிஸ்தானிய பகுதிகள், ராமநாதபுர ஸேதுபதி ராஜபரம்பரைக்குச் சொந்தமான கச்சத்தீவு, மற்றும் அந்தமானின் வடபக்கிலுள்ள தீவு என காங்கிரஸும் திமுகவும் இந்தியர்களையும் தமிழரர்களைக் கேட்காமல் வாரி வாரி மூளையற்ற முறையில் மற்ற நாடுகளுக்கு அதுவும் எதிரிகளுக்கு விசுவாசமாக தானம்போல கொடுத்த பகுதிகளை இப்ப வந்த பாஜக அரசுதான் மீட்க வேண்டும்னாக்க இவனுங்க எதுக்காக இன்னமும் வெட்கமில்லாம கட்சி நடத்தணும்? அதை மானமில்லாம விஜய் "ஜோஸப்" மோதியை ஏன் கேட்கணும்? திமுகவையும் காங்கிரஸையும் ஏண்டா கொடுதீங்கன்னு ஏன் கேட்கலை?


Priyan Vadanad
செப் 02, 2025 00:00

இங்குமா மத துவேஷம்.


rukmani
செப் 02, 2025 01:26

பாவம், விஜய் அவரை விட்டுவிடுங்கள். தனது இருப்பை காட்ட ஒரு மேடை பேச்சு. தமிழில் "கூட்டத்தோடு கோவிந்தா போ டு" என்பர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை