வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யாரு சீனாக்கு ஆதரவா இருக்காங்களோ அவுங்க தான் ஜெயிப்பாங்க ..இதில் சந்தேகம் என்ன
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்த நிலையில், செப்.,21ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை எதிர்த்து நிற்கும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளரான அனுரா திசநாயகே கருத்துக் கணிப்பில் முன்னணியில் இருக்கிறார். தேர்தல்
இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் ஒரு கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த இலங்கை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பல்வேறு நாடுகளின் உதவியுடன் மெல்ல மெல்ல சிக்கலில் இருந்து விடுபட்டு வருகிறது. கடந்தாண்டு சுற்றுலாப்பயணிகள் வருகை உள்ளிட்ட பல காரணங்களால் அந்நியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது.
மும்முனை
பொருளாதார நெருக்கடியில் மீண்டு வந்துள்ள மக்கள், தேர்தலில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சுயேச்சையாக போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, களம் இறங்கியுள்ளார். இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமாரா திசநாயகே, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே பிடித்த அவரது கட்சி, இந்த தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருக்கிறது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு பெரிய அளவில் ஆதரவு காணப்படவில்லை. பொருளாதார பிரச்னையில் சிக்கித் தவித்த நாட்டை, தன் சிறப்பான நடவடிக்கைகளால், மீட்டெடுத்து வந்ததாக விக்ரமசிங்கே தனது பிரசாரங்களில் கூறி வந்தார்.
சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு
இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி தமிழர் கட்சிகள் சார்பில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை. இலங்கை தமிழரசு கட்சி, சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கிறது. ஆனால், அதே கட்சியின் மூத்த தலைவர்கள், பொது வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனை ஆதரிக்கின்றனர். அனுரா திசநாயகேவும் தமிழர்களின் ஓட்டுக்களை கணிசமாக பெரும் வாய்ப்புள்ளது. இஸ்லாமிய கட்சிகள் சிலவும், சஜித்தை ஆதரிக்கின்றன.இத்தகைய சூழலில் செப்.,21ல் இலங்கையில் தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. பலர் முட்டி மோதினாலும், போட்டி என்னவோ, விக்ரமசிங்கேவுக்கும் திசநாயகேவுக்கும் தான் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
யாரு சீனாக்கு ஆதரவா இருக்காங்களோ அவுங்க தான் ஜெயிப்பாங்க ..இதில் சந்தேகம் என்ன