உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 60 ஆண்டுக்கு பின் பாஸ்போர்ட்டில் முத்திரை

60 ஆண்டுக்கு பின் பாஸ்போர்ட்டில் முத்திரை

துபாய்; மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தவர் ஜமாலுதீன், 90. இவர் 1965ல் பிழைப்பு தேடி, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு கப்பலில் சென்றார்.அப்போது துபாயில் துறைமுகம் கிடையாது. பாஸ்போர்ட்டில் குடியேற்ற முத்திரையிடும் நடைமுறையும் இல்லை.பள்ளிகளை நடத்தி வரும் ஜமாலுதீன் துபாய்க்கு வந்து, 60 ஆண்டுகளாவதை ஒட்டி, அவருடைய பாஸ்போர்ட்டில், நுழைவுக்கான முத்திரையை பதிவிடக் கோரி, அவருடைய மகன் ரியாஸ் விண்ணப்பித்தார். அதை ஏற்ற விமான நிலைய ஆணையம், அவரது பாஸ்போர்ட்டில் 60 ஆண்டுகளுக்கு பின் நினைவு முத்திரை பதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை