உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் புயல் 2,000 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் புயல் 2,000 விமானங்கள் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிகாகோ: அமெரிக்காவில் வீசிய புயல் காரணமாக, 2,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.அமெரிக்காவின் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில், நேற்று முன்தினம் கடுமையான புயல் வீசியது. சூறாவளி காற்று மட்டுமல்லாது இடி, மின்னலுடன் பலத்த மழையும் கொட்டியது; 75 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.இதனால், கிரேட் லேண்டு மற்றும் சிகாகோ தெற்கு பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கித் தவித்தனர்.புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.மேலும், புயல் காரணமாக சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது. 2,400 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது; 2,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக, அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணியர் தவித்து வருகின்றனர். பல்வேறு நகரங்களில், 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வீரா
ஜன 14, 2024 09:41

இந்த நிலைமை தமிழ் நாட்டில் வந்திருந்தால் 80,000 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்டு திமுகவினர் முடிந்த அளவுக்கு மேல் ஆட்டையை போடுவார்கள்.


Ramesh Sargam
ஜன 14, 2024 06:00

அமெரிக்காவில் பல மாநிலங்களில் கடும் குளிர். உடம்பு விறைத்துப்போகும் அளவுக்கு குளிர்.


g.s,rajan
ஜன 13, 2024 22:57

வளர்ந்த நாடுகளும் இயற்கையிடம் இருந்து தப்ப முடியாது.....


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி